பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்க நூலகம்

81


மாணவர்களைக் கவரத்தக்க வகையிலே பள்ளிநூலகம் அமைக்கப்படவேண்டும். நிலையெலாம் பூக்களும், சுவரெலாம் கண்ணைக் கவரும் ஓவியங்களும், எண்ணற்ற கண்ணுடிச்சாளரங்களும், ஓங்கிய மாடமும், மின்விசிறிகளும், விளக்குகளும் பொருந்தித் திகழும் அழகொழுகு கட்டிடத்தில் நூலகம் அமைத்தல் வேண்டும். நூலகத்தில் போடப்பட்டிருக்கும் நாற்காலிகளும் மேசைகளும் நூல் தட்டுகளும்கலை நுணுக்கம் பொருந்தச் செய்யப்பட்டிருக்க வேண்டும். இயன்ற வரையில், மாணவர்களே சென்று நூல்களை எடுத்துக்கொள்ளும் உரிமைமுறையில் நூலகம் அமைத்தல்வேண்டும். அப்போதுதான் மாணவர்க்கு நூலார்வம் பொங்கிக் கரைபுரளும். நூலகத்தை அழகுபடுத்துவதில் மாணவர்களையும் பங்கு கொள்ளச் செய்து, அது அவர்களுடைய உடைமை என்ற உணர்வை உள்ளத்தில் எழுப்பவேண்டும்.

'நூலகத்தின் சிறப்பும் சீரும் அங்கே காட்சியளிக்கும் நூல்கள், வந்து சேரும் பருவ மலர்கள் ஆகியவற்றைப் பொருத்து அமைவதால், புத்தம்புதிய கருத்துக்களைச் சுமந்து வரும் நூல்கள்மீது கழிகாதலும் காமமும் உடைய மாணவர்களையும் ஆசிரியர்களையும் கொண்ட ஒரு குழு அமைத்தல் வேண்டும். இக்குழுவில் இருப்போர் நாளிதழ்களிலும் பருவமலர்களிலும் வரும் மதிப்புரைகளைப் படித்தல், உள்ளுர்க் கடைகட்குச் சென்று சிறந்த நூல்களைக் குறித்தல், அவ்வப்போது வெளியாகும் நூல்களை விலைப்பட்டியல் கண்டு பொறுக்கல், பின்னர் இவற்றை வாங்குமாறு கூறல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும். சிறந்த நூல்களைப் படிக்குமாறு மாணவர்களைத் தூண்டுதலிலேயே ஆசிரியரின் திறமை அடங்கிக் கிடக்கிறது என்னலாம். இவ்வாறு சிறந்த முறையில் அமைந்த நூலகம் நன்கு நடைபெற வேண்டுமானல் அதனைத் திறமை மிக்க நூலகத் தலைவரிடம் ஒப்புவித்தல் வேண்டும். அது மட்டுமன்று; நூலகத்தலைவருக்குப் பிற துறை ஆசிரியர்களுக்கு அரிக்கும் ஊதியமும் உயர்வும் சலுகையும் வழங்க வேண்டும். ஒவ்வொரு உயர்நிலைப்பள்ளியிலும் நூலகத்துறையில் பட்டம்பெற்ற நூலகத்