பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வளர்க நூலகம்

83


ஒவ்வொரு மாணவர்க்கும் நான்கு அல்லது ஐந்து பக்கங்கள் கொடுக்கல் வாங்கல் பேரேட்டில் ஒதுக்க வேண்டும். அதில் அவர்கள் எடுத்துப் படித்த நூல்களைப் பதிவு செய்தல் வேண்டும். அவ்வாறு பதிவு செய்கையில் தேதிவாரியாகப் பதிவு செய்தல் வேண்டும். தலைமையாசிரியரோ வகுப்பாசிரியரோ அந்தப் பேரேட்டைப் பார்க்கும்பொழுது மாணவர்களின் படிப்புத் தரத்தை அவர்கள் படித்த நூல்கள் மூலம் எளிதில் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு அறிவுரைகள் கூறலாம். இதுமட்டுமன்று, மாணவர் ஒவ்வொருவரும் நாட்குறிப்பு வைத்துக்கொள்ள வேண்டும். அதில் தேதிவாரியாகத் தாம் படித்த நூல், அதன் ஆசிரியர், நூலிலிருந்து தம் கருத்தைக் கவரும் சில குறிப்புக்கள் ஆகியவற்றைப் பதிந்துகொண்டு வரல் வேண்டும். இவ்வாறு பதிந்துகொண்டே வந்த நாட்குறிப்பின்மூலம் அறிவின் வளர்ச்சியை அறிவதோடு பிற்காலத்தில் அக்குறிப்பேடுகள் படிப்பதற்கு மிகவும் சுவையாகவும் இருக்கும்.

எல்லாப் பொதுநூலகங்களிலும் பள்ளிப் பிள்ளைகளுக்கெனத் தனி நூல்கள் வாங்கி வைத்தல் வேண்டும். அவ்வாறு செய்வது பள்ளிப் பிள்ளைகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். விடுமுறை நாட்களிலும் நூலகங்கள் திறந்து வைக்கப்பட்டு இருக்கவேண்டும். அதனல் மாணவரும் உள்ளுர்ப் பொது மக்களும் நூல்களைப் படிக்க வாய்ப்பு ஏற்படும்.

பொதுநூலகங்கள் இல்லாத ஊர்களில் உள்ள பள்ளி நூலகங்கள் பொதுமக்களுக்கும் நூல்களைக் கொடுத்து உதவலாம். இதனல் பணம் சற்று அதிகமாகச் செலவாகும். எனினும் விளையும் பயன் பெரிதாகும். அஃதாவது இந்த உதவியினல் பொதுமக்களுக்கும் நூலகத்துக்கும் இடையே உறவு ஏற்பட்டு வளர வழியுண்டு. நூலக வரி போடப்படுமானல், அவ்வரி நூலகத்தின் வளர்ச்சிக்குச் செலவிடப்படல் வேண்டும். சிறிய