பக்கம்:உயிரோவியம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(13)

வீராசாமி - கன்னியம்மா

வீராசாமி:

ஆசை வளருதே ஒம்மேலே-மனசை
அடக்க முடியலை என்னாலே
பாசமில்லாதவளைப் போல-சும்மா
பசப்புறியே நீஎம் முன்னாலே -

என்னா பார்க்கிறே!
நாந்தான் கேக்கிறேன்?
சும்மா ஏய்க்கிறே!
பொளுதைப் போக்கிறே!

கன்னி : ஆசை அதிகமானதாலே-சுத்த
அறிவு கெட்ட மனுசன்போலே-சும்மா
பேசுறியே எம்முன்னாலே-ஒம்மேலே
பிரியமில்லாதவளை சரியாய்ப் புரியாமலே

உசிரை உட்டுடுவேன் முன்னாலே-அப்பாலே
ஒனக்குத்தான் கசுட்டம் பின்னாலே
நெசமாத்தான் சொல்லுறேன் ஒன்னாலே
இந்த நிமிசமே பாரு ஒங்கண்ணாலே
நோகுதே! உடம்பு வேகுதே!
காலம் போகுதே! வருத்தம் ஆகுதே! (ஆ)

கன்னி : சேதி தெரியாததினாலே-சும்மா
சீண்டுறே நீ இனிமேலே-பொண்ணு
பூதியா கெடக்கறாப் போல-விஷயம்
புரிஞ்சுக்கலே என்னை அறிஞ்சுக்கலே (ஆ)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உயிரோவியம்.pdf/18&oldid=1389691" இலிருந்து மீள்விக்கப்பட்டது