பக்கம்:உயிரோவியம்.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"உயிரோவியம்"

ஆசிரியர் : திரு. நாரண-துரைக்கண்ணன்.

கதைச் சுருக்கம்.

இது பெண்ணுரிமை பிரமாதமாகப் பேசப்படும் காலம் ஆனாலும், பெண்கள் ஆண்களோடு சரி நிகர் சமானமாக வாழக் கூடிய நிலை இன்னும் ஏற்படாததோடு மட்டுமல்லாமல் தங்கள் மனத்துக்குகந்த மணாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூட உரிமையில்லாது பலவிதமான கஷ்ட நஷ்டங்களையடைந்து வருகின்றனர். ஜீவாதாரமான இவ்வுரிமையின்மையால், எத்தனையோ மகளிர் தாங்கள் விரும்பிய காதலர்களை மணக்கமுடியாமல் மனம் நொந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் பெற்றோர் உற்றாரைத் துறந்து காதலித்த ஆடவர்களுடன் ஓடிவிடுகின்றனர். மற்றும் சில பெண்கள் பிறந்த குடியின் பெருமைக்குத் தங்களால் களங்கமேற்படக் கூடாதெனக் கருதிப் பெற்றோர் பார்த்துக் கட்டிய கணவன்மாருடன் காலமெல்லாம் மனவேதனையுடன் காலங் கழிக்கின்றனர். இத்தகைய தியாகவுணர்ச்சியுடன் வாழ்க்கை நடத்தும் பெண்மணிகள் மிகச் சிலரே. இத்தகைய பெண்களின் தியாகஉணர்ச்சிக்கு மதிப்புக் கொடுத்து தாங்களும் இன்ப வாழ்க்கையைத் துறக்கும் ஆண்களைப் பார்ப்பது அபூர்வம். அந்த அபூர்வமான நிகழ்ச்சியொன்றை மிக உன்னத முறை யில் சித்தரிப்பதுதான் 'உயிரோவியம்' நாடகத்தின் தத்துவமாகும்.

கற்பகம் கல்லூரி மாணவி. அவள் படிக்க எடுத்துக்கொண்ட தமிழ் எம்.ஏ., பரீட்சை பாடத்தை போதிப்பதற்காக நடராஜன் பிரத்தியேகமாக நியமிக்கப்படுகிறான். கற்பகத்தின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கல்லூரித் தலைவி மாலதி தேவி பத்திரிகையாளனாயிருக்கும் நடராஜனைத் தன் ஸ்தானத்தில் நியமித்துத் தன்னை அவ மதித்து விட்டதாகக் கருதி, பண்டிதை மங்களம்மாள் ஆத்திரங் கொள்ளுகிறாள். எனவே, பாடம் போதிக்கப்படும்.நேரங்களிற்போய் விஷமஞ் செய்கிறாள். இதனிடையே நடராஜனின் அழகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உயிரோவியம்.pdf/3&oldid=1540627" இலிருந்து மீள்விக்கப்பட்டது