பக்கம்:உயிரோவியம்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
2


இளமையும் அவளை மயக்குகிறது. எனவே, அவள் நடராஜனைத் தன் வசப்படுத்த முயல்கிறாள். நல்லொழுக்கம் வாய்ந்த நடராஜன் அவள் விரித்த காம வலையில் சிக்காமல் தப்பித்துக் கொள்கிறான். கற்பகத்தின் மீது கொண்டுள்ள காதலால்தான் நடராஜன் தன்னை அலட்சியப் படுத்திவிட்டான் என்று மங்களம்மாள் கருதி, இருவரையும் பிரிக்கச் சூழ்ச்சி செய்கிறாள்.

தன் குடும்ப சினேகிதரான சோமசுந்திர முதலியாருடைய தம்பி சந்திரசேகரனுக்குக் கற்பகத்தைக் கலியாணஞ் செய்து வைப்பதற்கு சபாரத்தின முதலியாரை மங்களம் சாகஸ மொழிகளால் இணங்கச் செய்து விடுகிறாள்.

முதல் சந்திப்பிலேயே கற்பகத்தின் செளந்தரியம் நடராஜன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விடுகிறது. பழக்கத்தில் கற்பகமும் நடராஜனிடத்தில் தன் மனதைப் பறி கொடுத்து விடுகிறாள். நாளடைவில் காதல் நேயம் ஏற்பட்டு விடுகிறது.

மங்களம் செய்த சதியால் திடீரெனக் கலியான ஏற்பாடு நடப்பதை யறிந்து, இருவரும் ஆறாத்துயரமடைகின்றனர். நடராஜன் வாழ்க்கைமீதே விரக்திகொண்டு அவன் இக்கலியாண ஏற்பாட்டைத் தடுக்க வழி கூறுமாறு கேட்டுக் கற்பகம் எழுதிய கடிதங்களைக்கூடக் கவனியாமல் இருந்து விடுகிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உயிரோவியம்.pdf/4&oldid=1540628" இலிருந்து மீள்விக்கப்பட்டது