பக்கம்:உரிமைப் பெண்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உள் நெருப்பு

5


ஏராளமாகச் சம்பாதித்துக்கொண்டு வந்துவிடலாம் என்று அவர்கள் நம்பிப் போனார்கள். அவர்களில் பொன்னப்பனும் ஒருவன்.

அவன் பல வருஷங்களுக்குப் பிறகு இன்று எதிர் பாராதவிதமாகத் திரும்பி வந்தான். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து மலேரியா ஜூரத்தால் பீடிக்கப்பட்டு மிகவும் மெலிந்திருத்தான். உடம்பு வெளுத்துத் துரும்பாக இருந்தது.

இனிமேலும் கண்டியில் இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற நிலையில் அவன் திரும்பி வந்திருக்கிறான்.

பொன்னப்பன் நல்ல வாயாடி. “இந்த வாயில்லாவிட்டால் உன்னை நாய் கூட மதிக்காது” என்று அவளுடைய அரட்டையைக் கேட்டவர்கள் சொல்லுவார்கள். பிற்பகல் சுமார் மூன்று மணியிருக்கும். பொன்னப்பன் கண்டியில் தனது வாழ்க்கையைப்பற்றி வேப்ப மரத்துக் கல்லுக்கட்டின் மேல் உட்கார்ந்துகொண்டு அங்கே சூழ்ந்திருந்த ஆடவர்களிடம் கயிறு திரித்துக்கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் சொங்கப்பன் தற்செயலாக அங்கு வந்தான். அவனுக்குப் பொன்னப்பன் திரும்பி வந்த சேதி அதுவரையில் தெரியாது.

வந்தவனைப் பொன்னப்பன், “என்ன சொங்கப்பா, தொங்கி கிந்தி பலமாக இருக்குதே; என்னைத் தெரியுதா?” என்று கேலியாய்ச் சிரித்துக்கொண்டு கேட்டான். அவ்வளவுதான், சொங்கப்பன் ஒரே பாய்ச்சலாக அவன் மேல் பாய்ந்து அடி அடி என்று அடித்து நொறுக்கிவிட்டான். “கேலியா பண்றே? அதெல்லாம் இப்போ எங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/10&oldid=1136632" இலிருந்து மீள்விக்கப்பட்டது