பக்கம்:உரிமைப் பெண்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை சொல்

101

 “உங்கள் மகனும் சொல் பேச்சுக் கேட்காமல் இருந்தானா என்ன?” என்று கேட்டார் வழுக்கைத் தலையர்.

“என் பேச்சைக் கேட்டுத்தான் இந்தக் கதி நேர்ந்தது. தந்தை சொல்லைத் தட்டப்படாதென்று நினைப்பது கூடச் சில சமயங்களில் துன்பமாய் முடிகிறது” என்றார் புதியவர்.

“உங்கள் மகனுடைய வாழ்க்கையைப்ப்ற்றிக் கொஞ்சம் விவரமாய்ச் சொன்னால் இந்தச் சமயத்திலே மிகவும் அதுகூலமாக இருக்கும். என் சினேகிதர் தம் மகனுடைய கல்யாண விஷத்தைப்பற்றி நிச்சயமாக ஒருவித முடிவும் செய்ய இயலாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்” என்று தொந்திக்காார் கேட்டுக்கொண்டார்.

புதியவர் சிறிதும் தயக்கமில்லாமல் பேசலானார். மற்றவர்களிடம் தமது விருத்தாந்தத்தைச் சொல்லுவதனாலேயே அவருக்குச் சற்று ஆறுதல் கிடைத்ததுபோலும்.

என் மகன் ரங்கசாமியை மிகவும் நல்ல பிள்ளை என்று எல்லோரும் சொல்லுவார்கள்; தந்தை சொல்லைத் தட்டாதவனென்று புகழ்ந்து பேசுவார்கள். என் சொல்லுக்கு எவ்வளவு துாரம் அவன் கட்டுப் பட்டிருந்தான் என்பது மற்றவர்களுக்கு அதிகமாகத் தெரியாது. தனது வாழ்க்கையைவிட எனது வார்த்தையே பெரிதென்று அவன் மதித்திருந்தான் என்பது எனக்குத்தான் தெரியும்.

எனக்கு அவன் ஒரே மகன். அவனைச் சுற்றித் தான் எனது முதுமைப் பருவத்தின் இன்பம் முளைவிட்டுக் கொண்டிருந்தது. அவனுடைய பிற்கால வாழ்க்கைக்காக நான் எத்தனையோ மனக்கோட்டைகள் கட்டியிருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/106&oldid=1138274" இலிருந்து மீள்விக்கப்பட்டது