பக்கம்:உரிமைப் பெண்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

உரிமைப் பெண்

 கேன். அவையெல்லாம் ஒரே கணத்தில் இடிந்து போகுமென்று எதிர்பார்க்கவே இல்லை. என் மகன் என் பேச்சுக்கு மாறாக நடக்கமாட்டான்; நான் போட்ட திட்டப் படியே எதிர்காலம் உருவாகும் என்று நான் மமதை கொண்டிருந்தேன். இவ்வாறு கூறிவிட்டு உணர்ச்சி மிகுதியால் அவர் மெளனமாக வீற்றிருந்தார்.

நண்பர்களுக்கு முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசை அதிகமாகிவிட்டது. “ரங்கசாமியைப்பற்றி விரிவாகச் சொல்லுங்கள்” என்று இருவரும் ஏகோபித்துக் கேட்டார்கள்.

அந்த மனிதர் மறுபடியும் தொடங்கினாா்.

எனக்குச் சொத்து அதிகம் இல்லை. இருந்தாலும் சிரமத்தைப் பாராமல் ரங்கசாமியைச் சென்னைக்கு அனுப்பிக் கல்லூரியில் படிக்க வைத்தேன். எப்படியோ கஷ்டப்பட்டு நான்கு வருஷம் படிக்க வைத்துவிட்டால் பின்னால் சுகப்படலாம் என்று நான் எண்ணியிருந்தேன். அவனும் கெட்டிக்காரனாதலால் சிறப்பாகத் தேர்ச்சியடைந்து அரசாங்க உபகாரச் சம்பளமும் பெற்று பி. ஏ. வகுப்பிற்கு வந்துவிட்டான். அதில் இரண்டாவது வருஷம் தொடங்கி மூன்று மாதங்களானதும் அவனுடைய கல்யாணப் பேச்சு ஆரம்பித்துவிட்டது.

என் சொந்த ஊருக்குப் பக்கத்திலேயே வேரறொரு சிற்றுார் இருக்கிறது. அங்கே நல்ல பூஸ்திதி படைத்த ஒருவர் வாழ்ந்து வருகிறார். அவருக்கு ஒரே மகள்தான் உண்டு. படித்த பையனாகப் பார்த்து அவளை மணம் செய்து வைக்கவேண்டுமென்று அவருக்கு ஆசை. எங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/107&oldid=1138275" இலிருந்து மீள்விக்கப்பட்டது