பக்கம்:உரிமைப் பெண்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

உரிமைப் பெண்

 கிட்டே கடக்காது” என்ற வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெடித்தன. சுற்றியிருந்தவர்கள் யாருமே அவனைத் தடுக்க முயலவில்லை. எல்லோரும் ஆச்சரியத்தால் அப்படியே மரம்போல் ஆகிவிட்டார்கள்.

கடைசியில் ஒன்றிரண்டு பேர் சமாளித்துக்கொண்டு சொங்கப்பனைப் பிடித்து விலக்கி விட்டார்கள். இன்னும் கொஞ்சநேரம் அவர்கள் குறுக்கிடாமலிருந்தால் பொன்னப்பன் உயிர் தப்புவதே அரிதாகியிருக்கும்.

சொங்கப்பனுடைய தொந்தியைப் பற்றி எத்தனையோ குத்தலான தமாஷ்களெல்லாம் நடந்திருக்கின்றன. அப் பொழுதெல்லாம் அவன் கோபித்ததே கிடையாது. அவ்வாறிருக்க இன்று திடீரென்று ஒரு சாதாரண வார்த்தைக்கு, அதுவும் இத்தனை வருஷங்களாக ஊரைவிட்டுச் சென்றிருந்த ஒருவன் கேட்டதற்கு அவ்வளவு கோபம் வருவானேன்? அதிலும் சொங்கப்பனும் பொன்னப்பனும் சிறுவயதில் ஒன்றாகவே மாடு மேய்த்துக்கொண்டிருப்பார்களாம். அப்படியிருக்க அவனுக்கு ஆளையே கொன்று விடுவதுபோலக் கோபம் வருவதற்குக் காரணம் என்ன ? எல்லோரும் மனத்திற்குள்ளேயே இக்கேள்விகளைக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் ஒருவருக்காவது நேரில் அவனை அந்தச் சமயத்தில் கேட்கத் தைரியம் வரவில்லை.

சிலர் சமாதான வார்த்தைகளைச் சொல்லிச் சொங்கப்பனே அவ்விடத்திலிருந்து கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள்.

ஒன்றிரண்டு மணி நோம் சென்ற பிறகுதான் மக்கள் நடந்த சம்பவத்தைப் பற்றி மெதுவாக அவனிடம் கேட்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/11&oldid=1136643" இலிருந்து மீள்விக்கப்பட்டது