பக்கம்:உரிமைப் பெண்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

உரிமைப் பெண்

 முன் காலக்திலே தமிழருடைய மண முறையே வேறு விதமாக இருந்தது. தான் காதலித்த பெண்ணையே ஒருவன் மணந்துகொண்டான். காதலைத் தவிர வேறு எதையும் அவன் கருதவில்லை. அதனால் அவனுடைய வாழ்க்கையானது இன்பம் நிறைந்திருந்தது. ஏழையினது குடிசையிலும் அன்பு நிறைந்திருந்ததால் இன்பம் நிறைந்திருந்தது. அம்மாதிரியான காதல் மணத்தையே நான் விரும்புகிறேன். ஒருவரை யொருவர் பார்த்தறியாத இருவரை வாழ்க்கைச் சகடத்தில் பிணைத்து ஒரு மனத்தோடு செல்லுமாறு ஏவுவது சரியான முறையல்லவென்பது நிச்சயம். தங்களுடைய ஆணைக்குட்பட்டு நான் மணம் செய்து கொள்ளலாம். ஆனால் ஆணைக்குட்பட்டு யாருடைய உள்ளமாவது அன்பு செய்யுமா என்பதை எண்ணிப் பாருங்கள். அன்பில்லாத வாழ்க்கையில் இன்பம் கிடைக்குமா?

தாங்கள் எனது இன்ப வாழ்க்கையைக் கருதியே இந்த ஏற்பாட்டைச் செய்ய முயலுகிறீர்கள் என்பது எனக்குக் தெரியும். செல்வனாகவும் சுகமாகவும் நான் இருக்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். இந்தக் கல்யாணத்தால் நான் செல்வனாகலாம்! ஆனால் சந்தோஷமாக நான் இருக்கவே முடியாது.

தங்கள் கடிதத்தில் கண்ட ஒரு விஷயந்தான் சதா என்னை வருத்துகிறது. எனக்காக நீங்கள் பெருங் கஷ்டப்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவைகளையும் நீங்கள் எனக்காகத் துறந்து விட்டீர்கள். உடல் நலிவு முதலியவற்றைக் கூடக் கவனியாது எனக்காக உழைக்கின்றீர்கள். என் தாய் உயிரோடிருந்தாலாவது தங்களுக்கு உதவியாக இருப்பாள்; தங்கள் வாழ்க்கையில் இன்பத்தை உண்டாக்க முயலுவாள். அவளும் இல்லாத நிலையில் தாங்கள் தனியாக நின்று படும் சிரமங்களை யெல்லாம் நான் நன்குணர்வேன். ஆனால் அவையெல்லாம் இன்னும் சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/111&oldid=1138374" இலிருந்து மீள்விக்கப்பட்டது