பக்கம்:உரிமைப் பெண்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தந்தை சொல்

109

 தங்கள் விருப்பத்தை நான் தட்டியதில்லை. தங்கள் சொல்லுக்கு வேறு எதிலும் மாறு கூறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எனது விருப்பம்போல் விட்டுவிட வேண்டுமென்று நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அப்படி விடுவதால் எனது வாழ்க்கை மட்டுமல்ல, தங்கள் வாழ்நாளும் இன்பமுடையதாக இருக்குமென்று நான் திண்ணமாக நம்புகிறேன்.

தங்கள் பணிவுள்ள மைந்தன்,
ரங்கசாமி.

“இந்தக் கடிதத்திலிருந்து அவன் என் சொல்லைக் தட்டுவதற்காகப் பெரிதும் மனம் வருந்துகிறான் என்று தெரிந்துகொண்டேன். அதனால் கல்யாணத்தை உறுதி செய்துகொண்டு முடிவாக எழுதிவிட்டால் அவன் எப்படியும் இணங்கி விடுவான் என்று தோன்றியது. பெண் வீட்டாருக்கு உறுதி கூறிவிட்டு அது விவரம் எழுதினால் அவன் என் வாக்கைக் காப்பாற்றுவான் என்று சூழ்ச்சி பண்ணினேன். இவ்வளவும் நான் என் மகனுடைய நன்மையை உத்தேசித்துத்தான் செய்தேன். அவனுக்குத் தீமையாக முடிகிற எதையும் நான் கனவிலும் கருதியிருக்கமாட்டேன். மண விஷயத்தைப்பற்றி முடிவு செய்ய இளம் வயதில் அநுபவம் போதாதென்றும் நான் நிச்சயமாக நம்பினேன். அதனால் என் சூழ்ச்சிப்படியே பெண்ணின் தந்தைக்கு உறுதி சொல்லிவிட்டு மைந்தனுக்கும் எழுதினேன்.

“எழுதிய மூன்றாம் நாள் காலையிலேயே நான் எதிர் பாராதவிதமாக ரங்கசாமி ஊருக்கு வந்தான். அப்பொழுது கிறிஸ்துமஸ் விடுமுறை யென்றாலும் அவன் ஊருக்கு வருவதாக முன்னால் தெரிவிக்க வில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/114&oldid=1138380" இலிருந்து மீள்விக்கப்பட்டது