பக்கம்:உரிமைப் பெண்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள் நெருப்பு

7

 ஆரம்பித்தார்கள். “சொங்கப்பா, என்ன உனக்கு அவ்வளவு பெரிய கோபம் வந்துவிட்டது ?” என்றார் ஒரு பெரியவர்.

பதில் இல்லை. பழையபடி மெளனப் பிள்ளையாாாகச் சொங்கப்பன் வீற்றிருக்கிறான்.

“அப்பா ! எல்லாரும் பயந்தே போனோம். இன்னும் சித்தே விட்டிருந்தா, ஆளையே தீர்த்திருப்பாய்; சொங்கப்பா, ஏன் அப்படிக் கோவிச்சுக்கிட்டே?” என்றார் ஒரு தாடிக்காார்.

“மறுபடியும் கோபம் வந்துவிடப் போகிறது; சும்மா இருங்கோ” என்றார் ஒரு குள்ளையர்.

“சே, சே, அப்படியெல்லாம் வாாது. இல்லையா சொங்கப்பா? ஏன் இன்னைக்கு அப்படிப் பண்ணினே? சொல்லு” என்றார் ஒரு நெட்டையர்.

பதில் பிறக்கலாயிற்று.

“என்னவோ அவனேப் பார்த்ததும் என்னை அறியாமலே கோபம் வந்துவிட்டது. அவனை அப்படியே கசக்கிப் போடலாம்னு ரோசம் வந்தது” என்றான் சொங்கப்பன்.

அவன் பதிலிலே பதற்றமோ கோபமோ இருக்க வில்லை. அதனால் எல்லோருக்கும் தைரியமும் உற்சாகமும் பிறந்துவிட்டன. அந்தக் குள்ளையருங்கூட அவனை மொய்த்துக்கொண்டு கேள்விமேல் கேள்வி தாராளமாகப் போட ஆரம்பித்தார்.

“ஆமாம்; அவன் உன்னை என்ன பண்ணினான் ? சும்மா கேலியாக ரெண்டு வார்த்தைதானே சொன்னான்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/12&oldid=1136737" இலிருந்து மீள்விக்கப்பட்டது