பக்கம்:உரிமைப் பெண்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உரிமைப் பெண்

றுமலர்ச்சி மன்றத்திலே இன்று கரசாரமாக விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

“சிறு கதைகள் புற்றீசல் போலக் கிளம்புகின்றன என்பதை நான் காண்கிறேன். ஆனால் அதில் மறுமலர்ச்சி எற்பட்டுவிட்டதென்பதை மட்டும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்ற அழுத்தமாகப் பேசினார் ஒரு மூக்குக் கண்ணாடிக்காரர்.

“முதலில் மலர்ச்சி இருந்தால்தானே பிறகு மறுமலர்ச்சி ஏற்படமுடியும்?” என்ற குயுக்தி செய்தார் ஒரு குள்ளையர்.

“என்ன இருந்தாலும் தமிழிலே சிறு கதைகள் இப்படிப் பெருகப்படாது. இது இலக்கிய வளர்ச்சிக்கு அறிகுறியல்ல. எந்தப் பத்திரிகையை எடுத்தாலும் சிறுகதை, சிறுகதை-ஒரே சிறுகதை மயம்தான்” என்றார் ஒரு வானவில் மீசைக்காரர்.

“தமிழில்தானா இப்படி? உலகத்திலே எந்த மொழியிலும் இப்படித்தான் இருக்கிறது. இது சிறுகதை யுகம்” என்றார் எல்லாம் அறிந்த ஒருவர்.

வேறு பாஷைகளில் எழுதுகிறார்களென்றால் அப்படி எழுதுகிறவர்களுக்குச் சிறுகதை இலக்கணமாவது தெரிந்திருக்கிறது. தமிழிலே அதையும் காணோமே!”

“காணோமென்று நீ எப்படிச் சொல்ல முடியும்?”

“எப்படிச் சொல்ல முடியுமா? கதையைப் படித்துப் பார்த்தால் தெரியாதா? அதற்குக்கூட உன்னைப் போலச் சிறுகதை எழுத்தாளராக இருக்கவேண்டுமா என்ன?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/120&oldid=1535137" இலிருந்து மீள்விக்கப்பட்டது