பக்கம்:உரிமைப் பெண்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

உரிமைப் பெண்

 “சிறுகதை இலக்கணம் உனக்கு நிரம்பத் தெரியுமோ? எங்கே, சொல் பார்க்கலாம்.”

“எனக்கு அதிகம் தெரியாவிட்டாலும் நீ எழுதுகிற கதையில் அந்த லக்ஷணம் கொஞ்சங்கூட இல்லை என்று சொல்லுகிற அளவுக்குக் தெரியும்.”

“எந்தக் கதையிலே லக்ஷணம் இல்லாமல் போய் விட்டது? எங்கே, ஒரு கதையை எடுத்துக் காண்பி பார்க்கலாம்.”

“ஏன், காலையிலே எனக்குப் படித்துக் காண்பித்தாயே, அதிற்கூடச் சிறுகதை இலக்கணம் இல்லை.”

“அந்தக் கதையைச் சரியாகப் புரிந்துகொள்ளச் சக்தியில்லாவிட்டால் பேசாமல் இருக்கவேண்டும். இலக்கணமில்லை என்று எதற்காக உன்னுடைய அறியாமையை வெளிப்படுத்திக்கொள்கிறாய்?”

“அந்தக் கதையில் அப்படிப் புரியாதபடி ஒன்றும் பிரமாதமாக இல்லை. உன்னுடைய கதையைப்பற்றி நீயே பெருமையடித்துக்கொள்ள வேண்டாம்.”

“என்ன, நீங்கள் இரண்டு பேருமே இப்படித் தனிச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறீர்களே! எங்களேயெல்லாம் மறந்துவிட்டீர்களே” என்று இந்தச் சமயத்தில் மற்ற அங்கத்தினர்கள் குறுக்கிட்டார்கள். இல்லாவிட்டால் வேலுச்சாமியும் சாமியப்பனும் எந்த நிலைமையில் தங்கள் வாக்குப் பூசலை நிறுத்தியிருப்பார்களென்று கூறமுடியாது. இருவரும் நெருங்கிய நண்பர்கள்தாம். ஆனால் இப்படி அபிப்பிராய வேறுபாடுகள் ஏற்பட்டுவிட்டால் மட்டும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். விவாதத்திற்கு வந்த பொருளைப்பற்றி அலசி அலசிப் பேசியபிறகு அதை முற்றும் விட்டுவிட்டு ஒருவர்மேலொருவர் வசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/121&oldid=1138400" இலிருந்து மீள்விக்கப்பட்டது