பக்கம்:உரிமைப் பெண்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரிமைப் பெண்

117

 வாளி தொடங்கிச் சிலநாட்களுக்குப் பேச்சு வார்த்தைகூட இல்லாத நிலை வரையில் சென்றுவிடுவார்கள். ஆனால் அந்த நிலைமை வெகு நாட்களுக்கு நீடிக்திருக்காது. வேலுச்சாமி மற்றொரு புதிய கதை எழுதும் வரையில்தான் சண்டை. அதை எழுதியானதும் அவன் எல்லாவற்றையும் மறந்து விட்டுச் சாமியப்பனிடம் ஒடுவான். ஆவலோடு கதையைப் படித்துக் காண்பிப்பான். இருவரும் பழையபடி நண்பர்களாகி விடுவார்கள். தனியாக இருக்கும்பொழுது அவர்களுக்குள் எண்ண வேறுபாடு உண்டானால் அது சண்டையாக மாறாது; மறுமலர்ச்சி மன்றத்திற்குள் புகுந்துவிட்டால் தான் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.

வேலுச்சாமி மற்றவர்களைப் பார்த்துப் பேசலானான்: “நான் எழுதிய கதையின் நோக்கத்தைத் தெரிந்துகொள்ளாமலே இவன் அதை மதிப்பிடுகிறான். அது தான் எனக்குப் பிடிக்கவில்லை.”

உடனே சாமியப்பன், “நோக்கத்தைப்பற்றி இப்பொழுது பேச்சில்லை; சிறுகதை அமைப்பு உன் கதையில் இல்லை என்பதுதான் என் கட்சி” என்று பதில் கொடுத்தான்.

“கதை முழுதும் ஒரே உணர்ச்சி தொனிக்கவில்லையா? காலத்தால் நீடித்திருதாலும் ஒரே உணர்ச்சியைத் தாங்கி நிற்பதும் சிறுகதைதான்.”

“என்ன உணர்ச்சியோ?” என்று குள்ளையர் நடுவில் புகுந்தார்.

“கொங்கு நாட்டுக் கிராமத்திலுள்ள மக்கள் பாரம்பரையாக வந்த பழக்கத்திலும் எண்ணங்களிலும் கட்டுண்டு கிடக்கிறார்கள்; அதனால் அவர்களுக்குள் முன்னேற்றமில்லை என்கிற உணர்ச்சிதான். இதுகூடத் தெரியவில்லையா?” என்று சிடுசிடுத்தான் வேலுச்சாமி.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/122&oldid=1138408" இலிருந்து மீள்விக்கப்பட்டது