பக்கம்:உரிமைப் பெண்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உரிமைப் பெண்

123

 “பையனுக்குப் புத்தி போகிறதைப் பார்! நம் அந்தஸ்து என்ன? ஊரிலே நமக்கு இருக்கிற மரியாதை என்ன? அந்தக் கூலிக்காரியைக் கட்டிக்கொண்டு எங்கே போய் உட்காருவாய்? மருமகன் போனால் ராகிக் களிகூடக் கிடைக்காது” என்று இகழ்ச்சியாகப் பேசினார் தந்தை.

அத்தை கண்ணீரைத் திறந்துவிட ஆரம்பித்தாள். "நான் என் ஒரே மகளை எத்தனே ஆசையாக வளர்த்தேன்! நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளாவிட்டால் எனக்கு இனிமேல் இந்த வீட்டிற்கு வர என்ன சொந்தம் இருக்கிறது?” என்று அங்கலாய்த்தாள்.

இப்படியாக, வீட்டில் ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோரும் காளியப்பனுக்கு விரோதமாகக் கிளம்பி விட்டார்கள். அவர்களுடைய தனித் தாக்குதல்கள், கூட்டுத் தாக்குதல்கள், இகழ்ச்சி வார்த்தைகள் முதலியவற்றை அவனால் சமாளிக்க முடியவில்லை. கடைசியாக அவன் தோல்வியடைந்தான். அத்தை மகளுக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்தேறியது. அத்தை மகள் என்ற உறவால் வந்த உரிமைப்பெண் வீடு சேர்ந்தாள். அன்பு என்னும் உறவால் வந்த உரிமைப்பெண் அங்கலாய்த்து நின்றாள்.

இரண்டு உள்ளங்கள் உடைந்துபோன இவ் வரலாற்றிலே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது வேறு என்ன இருக்கிறது? வேறு என்னதான் நிகழ்ந்திருந்தாலும் அதைப்பற்றிப் பேசிப் பயன் என்ன? காளியப்பனுடைய பெற்றோர்கள் தங்கள் விருப்பப்படியே மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்துத் தங்கள் அந்தஸ்தைக் காப்பாற்றிக்கொண்டார்கள். அவனுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/128&oldid=1138605" இலிருந்து மீள்விக்கப்பட்டது