பக்கம்:உரிமைப் பெண்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

உரிமைப் பெண்

 களேப்பற்றியும் அவளுடன் கலந்து யோசிப்பவன் அவளுடைய மணத்தைப்பற்றி மட்டும் அவ்வாறு செய்யவில்லை. அதைக் குறித்து அவளுடன் பேசுவதற்கு என்ன இருக்கிறது? கல்யாணம் என்றால் அது பெற்றோர்கள் ஆலோசித்து ஏற்பாடு செய்யவேண்டிய காரியந்தானே? அதில் மகனுக்கோ மகளுக்கோ என்ன யோசனை இருக்கிறது? கிராமங்களிலே பாம்பரையாக இந்த நியாயந்தான் வழக்கத்திலிருந்து வருகிறது. அதையே வீரப்பனும் பின்பற்றினான். ‘சிறு பிள்ளைகளுக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? எனக்குக் கல்யாணம் செய்தபோது என்னைக் கேட்டா செய்தார்கள்?’ என்று இப்படி அவன் எண்ணிக் கொண்டான். மேலும், தன் அருமை மகள் என்றாலும் அவளிடத்தில் கல்யாணத்தைப்பற்றிப் பேசுவதற்கு அவனுக்கு இயல்பாக வார்த்தை வரவில்லை.

அதனால்தான் அவன் இப்பொழுதுகூடப் பதில் சொல்லத் தயங்கினான். ஆனால் மகள் மறுபடியும் அதே கேள்வியை விடாது கேட்டாள். அவன் கொஞ்சம் சமாளித்துக்கொண்டு, “எனக்கும் வயசாகிவிட்டது. சிக்கிரமாக உனக்குச் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்துவிட்டால் மனசுக்கு நிம்மதியாக இருக்கும்” என்று ஒருவிதமாக மறுமொழி கூறினான்.

“இப்போ உங்களுக்கென்ன அப்படி வயசாய்ப் போய்விட்டது?” என்று தடுமாற்றத்தோடு வள்ளியாத்தாள் வினவினாள்.

“ஏன், சித்திரை வந்தால் ஐம்பது முடியுதே?”

“அதெல்லாம் ஒரு வயசா? என்ன இருந்தாலும் கடாரியை இப்போ விற்க வேண்டாமையா” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/19&oldid=1136756" இலிருந்து மீள்விக்கப்பட்டது