பக்கம்:உரிமைப் பெண்.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

உரிமைப் பெண்



“சோசியன் என்ன வேண்டுமானாலும் சொல்லுவான். அவனுக்கென்ன? அப்படி அவசரமாக இருந்தால் எங்காவது போகிறது.”

“அப்படிச் சொல்ல முடியுமா? அவளுக்கிருக்கிற உரிமை எங்கே போகும்?”

இந்தச் சமயத்தில் வாசலிலே கட்டியிருந்த கடாரி ‘ம்மா’ என்று கத்திற்று. வள்ளியாத்தாள் வெளியே வந்து, தான் பிடுங்கி வந்திருந்த பச்சைப் புல்லில் கொஞ்சம் எடுத்து அதனருகே போட்டுவிட்டு அங்கேயே நின்றாள். அவள் மனத்திலே என்ன என்னவோ எண்ணங்கள் எழுந்து மோதின. சற்று நேரம் மெளனமாக இருந்து விட்டு, “ஐயா, இந்தக் கடாரியை விற்கவே வேண்டாம்; இது ஒன்றிருந்தால் எனக்குப் போதும்” என்றாள்.

“என்ன வள்ளியாத்தா, இப்படிச் சொன்னால் எப்படி....?”

“நான் உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடத்திலே சொல்லுவேன்? அம்மாளா இருக்கிறாள்?” என்று சொல்லிக்கொண்டே அவள் தன்னையும் அறியாமல் அழுது விட்டாள்.

வீரப்பனுக்கு அந்த அழுகையின் பொருள் விளங்கவில்லை. தான் சொன்ன சொல்லை ஒரு நாளும் தட்டியறியாத மகள் அன்று கட்டுச் சோறு கட்டி வைக்காததன் குறிப்பும் அவனுக்குப் புலனாகவில்லை. கல்யாணப் பேச்சைக் கேட்டால் பெண்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்வது இயல்பு என்று எண்ணிக்கொண்டு அவன் காலையில் கடாரியைப் பிடித்துக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். அவன் அதைச் சாதாரணமாகப் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/21&oldid=1405825" இலிருந்து மீள்விக்கப்பட்டது