பக்கம்:உரிமைப் பெண்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

உரிமைப் பெண்

 “ஏன் பெரியப்பா? அத்தை விட்டுக்குத்தானே போயிருந்தீர்கள்?”

“இல்லேம்மா இல்லை. அப்பவே வள்ளியாத்தா அந்தக் கடாரியை விற்க வேண்டாமென்று சொன்னாள். நான் தான் கேட்காமல் கொண்டுபோனேன்.”

“அதை என்ன விலைக்குக் கொடுத்தீர்கள்?”

“அதை ஏன் கேட்கிறாய்? வள்ளியாத்தாள் ரொம்ப மனமுடைஞ்சு போவாள். எனக்கு அதுதான் கவலை. பணம் பெரிசில்லை.”

“பெரியப்பா, என்ன நடந்தது? சொல்லுங்கள்.”

“நான் அந்தக் கடாரியைப் பிடித்துக்கொண்டே போனேன். ரஸ்தாவைக் கண்டதும் சும்மா மிரண்டு மிரண்டு குதித்துக்கொண்டே வந்தது. காட்டுக்குள்ளேயே இருந்து வளர்ந்ததால், சைக்கிள், மோட்டார் ஒன்றையும் பார்த்தது கிடையாது. ஒரு நாலு மைல்கூடப் போயிருக்க மாட்டேன். பெரியநாயக்கன் பாளையத்திற்குப் பக்கமாகப் போயிருக்கலாம். ஒரு நாசமாப் போன மிலிட்டரி லாரி வந்து சேர்ந்தது. அந்தப் பாவி கிட்டவந்து பூம் பூமென்று சத்தம் பண்ணினான். கடாரி ஒரே இழுப்பாக இழுத்துக் கொண்டு போய்விட்டது. நானும் கூடவே ஒடிப் பார்த்தேன். என்னலே முடியல்லே” என்று சொல்லி அவன் நிறுத்தி விட்டான்.

“அப்புறம்...?” என்று பாவாத்தாள் மேலும் கேட்டாள்.


“அப்புறம் என்ன? இந்த இாண்டு நாளாக எங்கெல்லாமோ தேடிக்கொண்டே போனேன். வழி நெடுக விசாரித்துக்கொண்டே மலையருகில் போய்விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/27&oldid=1137102" இலிருந்து மீள்விக்கப்பட்டது