பக்கம்:உரிமைப் பெண்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பஞ்சுக் காலன்

சுந்தரம் வேட்டையாடுவதில் கை தேர்ந்தவன். நீலகிரித் தொடரிலே அவன் நுழையாத இடம் கிடையாது. எவ்வளவு அடர்ந்த காடு என்றாலும் அதற்குள்ளே அவனுடைய அடிச்சுவடு பட்டுத்தான் இருக்கும். யானை வேட்டை, புலிவேட்டை என்றால் அவனுக்கு ஒரே உற்சாகம். காட்டெருமை, காட்டுப் பன்றி முதலிய பயங்கர மிருகங்களையும் அவன் துப்பாக்கி எத்தனையோ தடவை உயிர் குடித்திருக்கிறது. ஆனால் புலி வேட்டையில்தான் அவனுக்கு அலாதியான விருப்பம்.

யானை மிகவும் பலம் வாய்ந்ததுதான். ஆனால் புலியின் தந்திரமோ குரூரமோ அதற்கு வராது. “யானையை ஏமாற்றி மடக்கிவிடலாம்; புலியிடத்திலே அந்த ஜாலமெல்லாம் பலிக்காது” என்று அவன் சொல்லுவான்.

“பிறகு எதற்காகப் புலி வேட்டை, புலி வேட்டை என்று எப்பொழுதும் அதையே நாடுகிறாய்?” என்று கேட்டால் அவனுக்குச் சிரிப்பு வந்துவிடும். “ஆட்டுக் குட்டியை வேட்டையாடுவதிலே என்ன சாமர்த்தியமிருக்கிறது? எந்த ஜமீன்தாரும் அதைச் செய்யலாம். எனக்குப் புலி வேட்டைதான் உகந்தது. மனிதனுடைய புத்திசாலித்தனத்தை அதுதான் ஒவ்வொரு விநாடியும் சோதனை செய்யக்கூடியது” என்று அவன் பெருமையோடு பதில் சொல்லுவான்.

அவன் கூறுவது முற்றும் உண்மைதான். புலி வேட்டை எளிதான காரியமல்ல. எடுத்து நீட்டியவுடன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/30&oldid=1137145" இலிருந்து மீள்விக்கப்பட்டது