பக்கம்:உரிமைப் பெண்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சுக் காலன்

29

 “ஒளியிடத்திலேயே ஜாக்கிரதையாக இருந்துகொண்டு எதாவது மிருகம் எதிர்ப்பட்டால் சுடுங்கள்; நான் இன்னும் கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்த்துவிட்டு வருகிறேன்” என்ற சொல்லிவிட்டு அவன் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனியாகப் புறப்பட்டான். சுமார் ஒரு மைல் அவன் நடந்திருப்பான். எதிரே ஒரு நீர்நிலை தென்பட்டது. அதைச் சுற்றிலும் சிறிதளவு வெளியிடம். பிறகு ஒரே மரச் செறிவு. அந்த நீர்நிலையை விட்டால் அவ்விடத்திலே வெகு தாகக்திற்குத் தண்ணீர் குடிக்க வேறொன்றுங் கிடையாது. ஆகையால் தாகங் கொண்ட பிராணிகள் எல்லாம் இரவு நோக்கிலே அங்கேதான் வர வேண்டும். புலி வேட்டைக்கு அதைப் போலச் சிறந்த இடம் கண்டுபிடிப்பது அரிது. சுந்தரம் மூன்று புலிகளை அங்கே சுட்டு வீழ்த்தியிருக்கிறான். ஆனால் அந்த இடத்தில் ஒரு கிழப் புலி மட்டும் அவனை இதுவரையில் ஏய்த்துக்கொண்டே வந்திருக்கிறது.

ஷிகாரி சுந்தரம் அதற்குப் பஞ்சுக்காலன் என்று பெயர் வைத்திருந்தான். புலிகள் எல்லாமே சப்தம் செய்யாமல் நடக்கக்கூடியவைதாம். அவற்றின் பாதங்களின் அடிப்பாகம் அவ்வளவு மெத்தென்றிருக்கும். வறண்டு உதிர்ந்துபோன இலைகளை மிதிப்பதால் ஒரளவு அரவம் கேட்குமேயொழிய, காலடி வைக்கும்போது உடம்பின் கனம் காரணமாக ஒசையே கேட்காது. இந்தக் கிழப் புலி உதிர்ந்த சருகுகளைக் கூட எப்படியோ சமாளித்துக் கொண்டு சிறிதளவும் ஒசை செய்யாமல் செல்லும். அதனாலேயே அவன் அதற்கு அப்படிப் பெயர் வைத்திருந்தான்.

பஞ்சுக்காலனுக்கு வயது முதிர்ந்து சிறிது தளர்ச்சியும் ஏற்பட்டுவிட்டது. வேகத்தில் வல்ல மான்களின்மீது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/34&oldid=1137176" இலிருந்து மீள்விக்கப்பட்டது