பக்கம்:உரிமைப் பெண்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

உரிமைப் பெண்

 முன்னைப்போல இப்பொழுது பாய்ந்து சாடுவதற்கு அதனால் முடிவதில்லை. பாயக்கூடிய துாரமும் கொஞ்சம் குறைந்து போயிற்று. அதனால் அது மனித இசையை நாட ஆரம்பித்தது. சாதாரணமாகப் புலிகள் மனிதனைக் கொல்ல இந்தத் தளர்ச்சி நிலையில்தான் தொடங்குவது வழக்கம். மனிதனுக்கு அத்தனே வேகம் கிடையாதல்லவா? இளம் பிராயம் முதற்கொண்டு புலிகளுக்கு மனிதனை அடித்துப் பழக்கமில்லை. காட்டிலே தனது தினசரி வாழ்க்கையிலே சந்திக்காக ஒரு புதிய பிராணி அவன். அதனால் பெரிய புலிகளும் அவனைக்கண்டால் பயந்து ஓடிவிடும். ஆனால் ஒரு தடவை மனித ரத்தத்தை ருசி கண்டுவிட்டால் பிறகு அந்த ருசியில்தான் அவற்றிற்கு நாட்டம் அதிகம். இப்படிப்பட்ட மனிதக் கொல்லிகளைச் சுடுபவர்களுக்கு அரசாங்கத்தில் சன்மானம் கொடுப்பதுண்டு.

பஞ்சுக்காலன் இதுவரை மூன்று பேரை மடக்கிவிட்டது. அதைச் சுட்டு மாய்க்கவேண்டுமென்று சுந்தரம் பல தடவைகளில் முயன்றிருக்கிறான். ஆனால் அவனை அது எப்படியோ ஏய்த்துக்கொண்டிருந்தது. அந்த மனிதன் தன்மேல் கண் வைத்திருக்கிறான் என்பதும் அதற்குத் தெரிந்துவிட்டது. அதனால் அதற்கும் சுந்தரத்தின் மேலே கண். அவனுடைய வாடை அதற்குத் தனியாகத் தெரியும். பஞ்சுக்காலனுடைய அடிச்சுவடுகளும் சுந்தரத்திற்கு நன்றாகத் தெரியும்.இப்படி மனிதனும் மிருகமும் போட்டி போட்டுக்கொண்டு கண் வைத்திருந்தது மற்றவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்களுக்குள்ளே மட்டும் பகை வளர்ந்துகொண்டேயிருந்தது.

சுந்தரம் அந்தத் தடாகத்துக்கு மேல்புறமாக மரக் கூட்டங்களிடையே மெதுவாக அமர்ந்தான். அங்கிருத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/35&oldid=1137181" இலிருந்து மீள்விக்கப்பட்டது