பக்கம்:உரிமைப் பெண்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சுக் காலன்

31

 நாலு பக்கமும் நன்றாகப் பார்க்கலாம். அவன் அங்கே சேருவதற்கும் முன்நிலா மறைவதற்கும் சரியாக இருந்தது. அவனுக்கு இருட்டிலே பார்த்து நல்ல பழக்கமுண்டு. கூர்ந்த பார்வையும், சிறிய அரவத்தையும் அறிந்து கொள்ளக்கூடிய செவி நுட்பமும் காட்டு வேட்டையிலே அத்தியாவசியம். பயிற்சியடைந்த அவனுடைய புலன்கள் எப்பொழுதும் உஷாராகவே இருக்கும்.

அன்றைக்கு வெகுநேரம் வரையிலும் யாதொரு பிராணியும் நீரருந்த வரவில்லை. மனித வாடையைக் கண்டு கொண்டனவோ என்று சுந்தரக்கிற்கு ஐயமுண்டாயிற்று. வேட்டை கிடைக்காவிட்டால் தீபாவளி குஷிப்படாதே என்று அவனுக்குக் கவலை. அதே சமயத்தில் அந்தப் பஞ்சுக்காலன் தன்னை நீண்ட நாளாக ஏமாற்றி வருவதை நினைத்து அதன்மேல் எரிச்சலும் உண்டாயிற்று. அவன் மனத்திலே பலவிதமான நினைவுகள் ஒடின. சுந்தரம் மெதுவாக மல்லாந்து தரையில் சாய்ந்தான். சிந்தனையின் ஒட்டமும், சிறிதும் கலைவுறாத ஆழ்ந்த நிசப்தமும் சேர்ந்து எப்படியோ அவனுக்குச் சிறிது நேரத்திலே உறக்கத்தை உண்டாக்கிவிட்டன. கண்கள் அவனை அறியாமலே நித்திரை யில் மூடின. வலது கையில் வைத்திருந்த துப்பாக்கியின் பிடியும் தளர்ந்து போயிற்று. கைகள் இரண்டும் நெஞ்சின் மேலே கட்டைகள் போலக் கிடந்தன.

அடர்ந்த காட்டிற்குள்ளே அவன் இவ்வாறு அஜாக்கிரதையாக என்றும் தாங்கினதே இல்லை. இன்று அவனுக்குப் பொல்லாத காலம் போலிருக்கிறது.

இவ்வாறு அவன் ஆழ்ந்து உறங்கும் சமயத்திலே அவனுக்கு எதிரிலே ஒரு பயங்கரக் காட்சி நடைபெற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/36&oldid=1137183" இலிருந்து மீள்விக்கப்பட்டது