பக்கம்:உரிமைப் பெண்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

உரிமைப் பெண்

 கொண்டிருந்தது. கலைமான் ஒன்று மருண்டு மருண்டு பார்த்துக்கொண்டு மெதுவாக நீர்நிலையை அணுகிற்று. அதன் காதுகள் விறைப்பாக நின்றன. மான் தனது வாயை நீரில் வைப்பதற்குமுன் மறுபடியும் சுற்றிலும் ஒரு முறை ஊடுருவிப் பார்த்தது. அவ்வளவுதான்; அக்கணமே திடீரென்று திரும்பி மின்னல் வேகத்தில் வந்த வழியிலேயே தாவிற்று. அதே சமயத்தில் பஞ்சுக்காலன் அதன் மேலே சரேலென்று பாய்ந்தது. அதன் நகங்கள் வெளியில் கோரமாகத் துறுத்திக்கொண்டு மானின் உடலைக் கிழிக்கத் தயாரக இருந்தன. ஆனால் ஒரு முழ துாரத்திற்குள் அதன் பாய்ச்சல் தப்பிப் போய்விட்டது. கலைமான் தனது முன்னெச்செரிக்கையினாலும் கால்களின் உறுதியாலும் உயிர் பிழைத்துச் சென்றோடி மறைந்தது. பஞ்சுக்காலனின் முதுமையும் பாய்ச்சல்துாரக் குறைவும் மானுக்கு உதவியாக நின்றன. பஞ்சுக்காலன் பாய்ந்ததாலும், மரச் செறிவிற்குள் மான் குதித்தோடியதாலும் ஏற்பட்ட அரவத்தால் சுந்தரம் விழித்துக்கொண்டான். ஆனால் அவன் திடுக்கிட்டு எழுந்திருக்கவில்லை. காட்டிற்குள்ளே அப்படி எழுங்திருப்பது உயிருக்கு ஆபத்து என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் நெருக்கடியான சமயங்களிலும் அவன் அசையாதபடி கண்ணை விழித்து நிதானமாகச் சுற்றிலும் பார்க்கப் பழகியிருந்தான்.

அப்படி இன்று நாலு பக்கத்திலும் பார்க்கின்ற போது ஏமாந்துபோன கிழப் புலியின் உருவம் சற்றுத் துாரத்தில் தெரிய வந்தது. சுந்தரம் அந்தத் திசையிலே பார்வையைச் செலுத்திப் பஞ்சுக்காலனைப் பார்ப்பதற்கும் அது அவனை ஏறிட்டுப் பார்த்து அறிந்துகொள்ளுவ-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/37&oldid=1137185" இலிருந்து மீள்விக்கப்பட்டது