பக்கம்:உரிமைப் பெண்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பஞ்சுக் காலன்

35

 முயற்சியும் செய்யாமலா இந்தப் புலியின் வாயில் சிக்குவது என்று அவனுக்குக் கோபம் வேறு. என்ன ஆனாலும் சரி, துப்பாக்கியை எடுத்துச் சுடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

இரண்டு உயிர்களும் ஒரே முடிவுக்கு வங்கிருக்கின்றன. எந்த உயிர் எந்த உயிருக்குப் பலியாகுமோ என்று திகைக்கும்படியான அந்தப் பயங்கரக் கண நேரம், புலியின் வால் சுருண்டு நிமிர்த்துவிட்டது. பாய்வதற்கு வேண்டியவாறு உடம்பு முறுக்கேறிவிட்டது. சுந்தரத்தின் கை துப்பாக்கியைத் தாக்கத் துடித்துக்கொண்டிருக்கிறது. இரண்டு ஜோடிக்கண்கள் மட்டும் மாறாமல் ஒன்றை ஒன்று விழுங்குவனபோல் பார்த்திருந்தன. அவற்றிற்கிடையே கூற்றுவனின் பாசக் கயிறு இங்கா அங்கா என்று ஊசலாடிக்கொண்டிருந்தது.

ஆயிற்று, பஞ்சுக்காலன் பாயப் போகிறது. அந்தக் கணத்திலே எதிர்பாராத கிரீச் என்ற ஒரு குரல் கேட்டது. ஒர் எலியின் கீச்சுக் குரல். அதையொட்டி ஒர் ஆந்தையின் அலறல். எலியென்றால் ஆந்தைக்குப் பிரியமான உணவல்லவா? எங்கேயோ மரக் கிளையிலே உட்கார்ந்திருந்த அந்த ஆந்தை பஞ்சுக்காலனுக்கு அருகிலே குடுகுடுவென்று சென்ற ஒர் எலியைப் பார்த்துவிட்டது. அதன்மேல் ஒரே பாய்ச்சல், எலி பயந்து அலறிக் கத்தியது. அதைக் கொன்ற ஆந்தையும் வெற்றிக் குரல் கொடுத்தது. இவ்வாறு ஏற்பட்ட அந்த சப்தம் எப்படியோ பஞ்சுக் காலனின் கவனத்தை ஒரு விநாடி கவர்ந்தது. பார்வையைக் கொஞ்சம் அந்தப் பக்கம் திருப்பிற்று.

சுந்தரத்திற்கு அந்தக் கண நேரம் போதும். மின்னல் வேகத்திலே துப்பாக்கியை எடுத்துக் குறி வைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/40&oldid=1137206" இலிருந்து மீள்விக்கப்பட்டது