பக்கம்:உரிமைப் பெண்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எது பெரிது ?

“ஒவ்வொருவனுக்கும் அவன் அவன் உயிர்தான் பெரிது. அதற்கப்புறத்தான் மற்றதெல்லாம்” என்றார் கல்யாணசுந்தரம்.

“ஒரே அடியாக அப்படிச் சொல்வதற்கில்லை. உயிரைக் காட்டிலும் பிரியமானது வேறே ஏதாவது ஒன்று ஒவ்வொருவனுக்கும் இருக்கலாம்” என்று எதையோ யோசித்துக்கொண்டே பதில் கொடுத்தார் அவருடைய நண்பர் வீராசாமி.

“அதெல்லாம் வெறும் பேச்சு. உயிர்தான் மனிதனுக்கு எல்லாவற்றையும்விடப் பிரியமானது.”

“நீங்கள் சொல்வதை ஒரளவிற்கு நான் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் நான் அதை முற்றும் ஆமோதிக்க முடியாது.”

“தன்னுடைய உயிரின் மேல்தான் மனிதனுக்குப் பற்று அதிகம் என்பதை எடுத்துக் காட்டச் சுவாமி சாமதீர்த்தர் அழகான கதை ஒன்று சொல்லியிருக்கிறார். அது உங்களுக்குத் தெரியுமா? சிறு வயசிலிருந்து ஒருவன் வெவ்வேறு பொருள்களின்மேல் ஆசை கொள்வதை யெல்லாம் அவர் கூறிக்கொண்டே வருகிறார். கல்யாணம் செய்துகொள்ளுகிறபோது அவன் தனக்குத் தன் மனைவி தான் மிகப் பிரியமானவள் என்று நினைத்தானாம், இரண்டு வருஷங்கள் கழிகின்றன. ஒர் ஆண்குழந்தை பிறக்கிறது. அவனுடைய ஆசையெல்லாம் குழந்தையிடம் செல்கிறது. உயிரைக் காட்டிலும் அதுவே மேலானது என்று அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/42&oldid=1137216" இலிருந்து மீள்விக்கப்பட்டது