பக்கம்:உரிமைப் பெண்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது?

39

 “பிறகு யார் ஜெயித்தது? அவரே ஜெயித்தார் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லுவேன்.”

“இல்லை; அப்படி ஒன்றும் இல்லை. அந்த விஷயமே வேறு விதமாக முடிந்துவிட்டது.”

“அதைத்தான் கொஞ்சம் விவரமாகச் சொல்லுங்களேன்.”

“என்னுடைய கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்காக நான் அதைச் சொல்ல வரவில்லை. ஆனால் அந்த விவாதத்தின் முடிவிலே ஒர் உருக்கமான சம்பவம் இருக்கிறது. அதைப்பற்றி யோசிக்கவேண்டும் என்பதற்காகவே சொல்லுகிறேன்” என்று விராசாமி பீடிகை போட்டுக்கொண்டார்.

வீராசாமியும் கல்யாணசுந்தரமும் சென்னைக் கடற்கரையிலே வீசும் காற்றை அனுபவித்துக் கொண்டு மணற் பரப்பில் அமர்ந்திருக்கிறார்கள். வீராசாமிக்கு அறுபது வயது இருக்கும். ஆனால் அவளைப் பார்த்தவர்கள் அத்தனை வயது மதிப்பிடவே மாட்டார்கள். மற்றவருக்கு 45 இருக்கும். ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர் ஒட்டுக் குடியாகத் தியாகராயநகரில் உள்ள வீராசாமியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அது முதல் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பு வளர்ந்துவந்தது. சில நாட்களில் அவர்கள் இாண்டு பேருமாகச் சேர்ந்துகொண்டு கடற்கரைக்குச் செல்லலானார்கள். சுவாரசியமாக எதைப்பற்றியாவது பேசி மாலை நேரத்தை இன்பமாகக் கழித்துவிட்டுத் திரும்புவார்கள். இன்றும் அம்மாதிரிதான் வந்து வார்த்தையாடிக் கொண்டிருக்கிறார்கள். வீராசாமி ஆரம்பித்தார்:—

“நடராஜ பிள்ளை எனக்கு நெருங்கிய நண்பர். உங்களுக்கு அவரை நேரிலே தெரிந்திருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/44&oldid=1137220" இலிருந்து மீள்விக்கப்பட்டது