பக்கம்:உரிமைப் பெண்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது ?

43

 பொறுப்பாகக் காரியங்களைக் கவனிப்பதற்கும் அவரைப் போல வேறொருவர் கிடைக்க முடியாது. அத்தனைக்கும் அவர் சாதாரண மனிதர்தான்; சாது. அநாவசியமாக வேறொருவர் விஷயத்தைக் காதிலேகூட வாங்கிக்கொள்ள மாட்டார். பக்கத்து வீட்டுக்காரருக்குக் கூட அவரைத் தெரியாது. தாமுண்டு, தமது வேலை உண்டு என்று இருப்பார். வாரத்திற் கொருமுறை உல்லாச சபைக்கு வருவதைத் தவிர அவரை வெளியே அதிகமாகப் பார்ப்பது அருமை. ஆனால் அவரிடம் குறைபாடே இல்லை என்று சொல்ல முடியாது. பெண்கள் விஷயத்திலே அவருக்கு அவ்வளவு உறுதி இல்லை. இப்படி இன்னும் சில சொல்லலாம். ஆனால் நண்பன் என்ற முறையில் நான் எல்லாவற்றையும் வெளியில் கூற விரும்பவில்லை. சாதாாண மனிதர்தான் அவர் என்பதை உங்களுக்குக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறேன்.

“அவர் பாங்கிலே குமாஸ்தாவாக 30 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார். ஒழுங்காக வேலை செய்து வந்ததால் படிப்படியாகப் பதவி உயர்ந்தது. பத்தாவது வரையில் தான் அவர் படிப்பு. இருந்தாலும் கடைசியில் தலைமைக் கணக்கராகவே ஆகிவிட்டார். காரியாலயத்திற்குத் தாமதமாய் ஒரு நாள் கூட அவர் போனதில்லை. பத்து மணி என்றால் சரியாகப் பத்து மணிக்கு ஆஜாாகிவிடுவார். அவர் உள்ளே நுழைவதைக் கண்டு கடிகாரத்தில் மணியைச் சரிப்படுத்தி வைக்கலாம் என்று மற்றவர்கள் சொல்லுவார்கள். அத்தனை சிரமமாக அவர் வேலைக்கு வருவார். யாராவது காலங்தாழ்த்து வந்தாலோ, அல்லது கணக்கைச் சரியாக வைக்காவிட்டாலோ அவருக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்காது. இந்தக் காலத்துப் பையன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/48&oldid=1137249" இலிருந்து மீள்விக்கப்பட்டது