பக்கம்:உரிமைப் பெண்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது ?

45

 அதிகம். ஆனால் உத்தியோகம் செய்கிறபோது அதற்குப் போதுமான நேரம் கிடைக்கவில்லை. ஏதோ மாலை வேளையில் சிறிது நேரம் தமது வீட்டைச் சுற்றியுள்ள செடிகளைக் கவனித்துக்கொண்டிருப்பார்; அவற்றிற்குக் கிணற்றிலிருந்து நீரிறைத்து ஊற்றுவார். வயது ஆக ஆகத் தளர்ச்சி அதிகரிக்கத் தொடங்கியதால், காரியாலயத்திலிருந்து மாலையில் வந்த பிறகு இதைக்கூடச் செய்ய முடியவில்லை. அலுப்பு அதிகமாய் ஏற்பட்டது. ஆதலால் வேலையைவிட்டு விலகியதும் தமது காலத்தையெல்லாம் பூக்களோடு செலவிட வேண்டுமென அவர் ஏங்கிக்கொண்டிருந்தார். இன்னும் மூன்று மாத காலம் இருக்கிறது. பிறகு இந்தச் செடிகளோடு செடியாய்ப் பேசாமல் உட்கார்ந்துவிடுவேன். வேலை பார்ப்பதிலே ஒரு தப்பு வரப்படாது என்று நினைத்து நினைத்து அந்தக் கவலையே எனக்கு இப்பொழுது ஒரு பாரமாக இருக்கிறது. அந்திய காலத்தில் இந்தப் பொறுப்பையெல்லாம் இளமையும் வலிமையும் உள்ளவர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஒய்வு பெற வேண்டாமா? எனக்கு இப்போது ஒய்விலே அதிக ஆசை வந்துவிட்டது என்று என்னிடம் அவர் கூறினர்.

“அப்படிக் கூறி ஒரு மாதங்கூட ஆகவில்லை. அவருக்கு ஒய்வு கிடைக்க இன்னும் இரண்டு மாதங்களே இருந்தன. திடீரென்று அவர் விஷயமெல்லாம் எதிர்பாராத விதமாய் மாறிப் போய்விட்டன.”

“நடராஜ பிள்ளை வழக்கம்போலக் காலத் தவறாமல் பாங்குக்குச் சென்றுகொண்டிருந்தார். விரைவில் கிடைக்கப்போகிற ஒய்வைப் பற்றிய நினைவால் உண்டான ஒரு வித இன்பத்தின் சாயல் அவருடைய முகத்தில் மலர்ந்து கொண்டிருந்தது. ஒருநாள் மாலை ஐந்து மணி இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/50&oldid=1137255" இலிருந்து மீள்விக்கப்பட்டது