பக்கம்:உரிமைப் பெண்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

உரிமைப் பெண்


பாங்கு மூடும் சமயம். நடராஜ பிள்ளையின் தங்கை மகன் அருணாசலம் அவசர அவசரமாக அவருடைய அறைக்குள்ளே நுழைந்தான். அவனுக்கு இாண்டாயிரம் ரூபாய் உடனே தேவையாயிருந்தது. அது எதற்கு என்று அவர் என்னிடம் சொல்லவில்லை. ஏதோ தவிர்க்கமுடியாத நெருக்கடியாகத்தான் இருக்கவேண்டும். நடராஜ பிள்ளைக்கு அந்தப் பையனிடம் அதிகப் பிரியம் உண்டு. மேலும் அவனுக்குத்தான் அவர் தம் கடைசி மகளைக் கல்யாணம் செய்து கொடுப்பதென்று முடிவு செய்திருந்தார். அவருக்கு மூன்று குழந்தைகள். மூன்றும் பெண்கள். இருவருக்கு விவாகமாகிவிட்டது. கடைசி மகளுக்குப் பதினேழு வயது இருக்கும். அவள் மட்டும் வீட்டில் இருக்கிறாள். ஒய்வு பெற்று வந்ததும் கல்யாணத்தை முடித்துவிட்டுத் தான் அவர் யாத்திரை கிளம்புவதாகத் திட்டம் வகுத்திருந்தார்.

அருணாசலம் நல்ல பிள்ளைதான். அவன் பி. ஏ. வரையில் படித்து முடித்துவிட்டுச் சொந்தமாக ஏதோ வியாபாரம் செய்துகொண்டிருக்கிறான். அவனுக்கு என்ன அவசரமோ தெரியவில்லை. அந்தச் சமயத்திலே பணம் கிடைக்காவிடில் பெரிய சங்கடம் ஏற்பட்டிருக்குமென்று நான் ஊகிக்கிறேன். ஆனால் அதைப்பற்றி மட்டும் நடராஜ பிள்ளை என்னிடம் கூற விரும்பவில்லை. அதைப் பற்றிப் பேசுவதில் அவருக்கு மனமில்லை என்று தெரிந்ததால் நான் வற்புறுத்த வேண்டாமென இருந்துவிட்டேன்.

மருமகனுக்குப் பணம் கொடுத்து உதவ வேண்டுமென்று அவர் நினைத்தார். ஆனால். உடனே இரண்டாயிரம் ரூபாய்க்கு எங்கே போவது? அடுத்த நாள் காலை வரையிலும் அவகாசம் இருந்தாலும் அவர் சமாளித்துவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/51&oldid=1137259" இலிருந்து மீள்விக்கப்பட்டது