பக்கம்:உரிமைப் பெண்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது?

47

 முடியும். கைமாற்றாகவே அந்தத் தொகையை அவர் சுலபமாக வாங்கலாம். ஆனால் உடனே வேண்டுமென்றால் என்ன செய்வது?

பாங்கு மானேஜரும் தம் வீட்டிற்குப் போயாகிவிட்டது. அவர்தாம் கடைசியாக வரவு செலவுக் கணக்கைப் பார்த்துக் கையிருப்புச் சரியாக இருக்கிறதா என்றும் சோதித்து,பணத்தை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டி விட்டுப் போகவேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் இவவாறு நடக்கிறதில்லை. சில நாட்களிலே அவர் முன்னலேயே போய்விடுவார். நடராஜ பிள்ளையிடம் அளவற்ற நம்பிக்கை இருந்ததால் மானேஜர் கையிருப்பைப்பற்றி அவ்வளவு கவலைப்படுவதில்லை. பணப்பொறுப்பு அவருக்கு முக்கியமாக உண்டென்றாலும் இத்தனை வருஷங்களாக ஏற்பட்ட நம்பிக்கையின் காரணமாக அவர் நடராஜபிள்ளை விஷயத்தில் அத்தனை ஜாக்கிரதையாக இருப்பதிலலை. இரும்புப் பெட்டிக்கு அவரிடத்திலே ஒரு சாவியும், நடராஜ பிள்ளையிடத்திலே ஒரு சாவியும் இருக்கும். அவரிடம் உள்ளதுதான் ராஜ சாவி. அதைக் கொண்டு பூட்டிவிட்டால் மற்றச் சாவியால் திறக்க முடியாது. ஆனால் நடராஜபிள்ளையிடம் உள்ள சாவியைக் கொண்டு பூட்டினல் அவரிடம் உள்ளதைக் கொண்டு திறந்துவிட முடியும். மானேஜரிடம் ராஜ சாவி இருப்பதன் அர்த்தமே அவருக்குத்தான் பணப் பொறுப்பு என்பதாகும். ஆனால் நம்பிக்கை வலுக்கிறபோது உஷாரெல்லாம் சற்றுத் தளர்வது சகஜந்தானே? அந்த மாதிரியே இன்றும் நடந்துவிட்டது.

“மானேஜர் போய்விட்டார். நடாாஜ பிள்ளையே பணப் பெட்டியைப் பூட்டிவிட்டுச் செல்லவேண்டும். மறுநாள் காலையிலும் அவர்தான் அதைத் திறப்பார். கொடுக்கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/52&oldid=1137265" இலிருந்து மீள்விக்கப்பட்டது