பக்கம்:உரிமைப் பெண்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

உரிமைப் பெண்

 வாங்கல் தொடர்ந்து நடக்கும். நடராஜ பிள்ளை வழக்கமாகக் கணக்கை ஒரு தடவைக்கு இரண்டு தடவை சரி பார்த்து இருப்பை எண்ணிக் கட்டி வைத்துவிட்டுப் போவார். ஒரு சல்லிக் காசு குறையாது. நூறு ரூபாய் நோட்டுக்கள் தனியாக, பத்து ரூபாய் நோட்டுக்கள் தனியாக, மற்றவை தனியாக, ரூபாய் நாணயம் சில்லறைகள் தனியாக ஒழுங்காக இருக்கும்படி வைப்பார். பார்த்தவுடனே இருப்புத் தொகை சட்டென்று தெரிகிற மாதிரி துண்டுக் காகிதங்களில் ஒவ்வொரு கட்டின் மதிப்பையும் எழுதி அதில் செருகி வைத்திருப்பார். ஒரு நாள், அரை நாளுக்கென்றாவது அவர் அதில் காலணாக்கூடத் தமது சொந்தக் காரியத்திற்காகத் தொட்டது கிடையாது.

ஆனால் இன்றைக்கு அதிலிருந்து அருணாசலத்திற்கு இரண்டாயிரம் கொடுத்தால் என்ன என்று யோசிக்கலானர். அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்குள் அந்தத் தொகையைச் சமாளித்து விடலாம். பிறகு காரியாலயத்திற்கு வந்ததும் அதைப் பெட்டியில் வைத்துவிட்டால் போகிறது - யார் கவனிக்கப் போகிறார்கள்? மேலும் அவர் என்ன, களவாடவா போகிறார்? எதிர்பாராத நெருக்கடியைத் தீர்க்க எடுத்துக்கொண்ட தொகையை யாரும் அறியாமல் மறுநாள் காலையிலே திருப்பி வைத்து விடப் போகிறார், அவ்வளவுதானே? செய்கிற காரியம் என்னவோ தப்பு என்பதில் சந்தேகமில்லை. முடிவில் அதற்கு அவர் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை. பாங்குப் பணத்தைக் கையாடுவதா என்று அவர் நெஞ்சம் திடுக்கிட்டது. ஆனால் அந்த நெருக்கடியான நிலைமையிலே வேறு என்ன செய்வது?—கொஞ்ச நேரம் அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/53&oldid=1137279" இலிருந்து மீள்விக்கப்பட்டது