பக்கம்:உரிமைப் பெண்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது?

49

 யாதொரு தீர்மானத்திற்கும் வர முடியாமல் ஊசலாடினார். மருமகனுக்கு இல்லையென்று சொல்லவும் மனம் வரவில்லை; பணத்தைத் தொடவும் கைவரவில்லை.

பணத்தை எடுக்கும் விஷயம் யாருக்குத் தெரியப் போகிறது என்கிற எண்ணமே கடைசியில் வெற்றி கொண்டது. நூறு ரூபாய் நோட்டுக்களாக இருபதை எடுத்து அருணாசலத்திற்கு அவர் கொடுத்துவிட்டார்.

பாங்கியை விட்டு வீடு வந்ததும் அவர் பணம் தேடும் முயற்சியில் ஈடுபடலானர். நாணயமுடையவராதலாலும், கைமாற்று வாங்கினால் குறித்த நாளில் தவறாமல் திருப்பிக் கொடுப்பார் என்று பலருக்கும் தெரியுமாதலாலும் பணம் எளிதில் கிடைத்தது. இரவு பதினெரு மணிக்குக் கையிலே இரண்டாயிரம் சேர்ந்தபோதுதான் அவருக்கு நிம்மதி உண்டாயிற்று.

மறுநாள் காலேயிலே உணவருந்தியதும் பணத்தை ஒரு பையில் பத்திரமாக முடித்து கொண்டு வழக்கமாகப் புறப்படும் நேரத்திற்குச் சற்று முன்னதாகவே பாங்கிக்குப் புறப்பட்டார். எப்படியும் காலதாமதம் ஆகிவிடக்கூடாது என்பது அவர் கவலை. சரியாக ஒன்பது மணிக்கு அவர் ஏறியிருந்த பஸ் கிளம்பியது. இருபது நிமிஷத்தில் மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணியில் பஸ் நிற்கும் இடம் சேர்த்துவிடலாம்; அங்கிருந்து ஐந்து நிமிஷ நடை. சரியாக 9-25 க்குப் பாங்கியில் இருக்கலாம். அதனால் அவர் நெஞ்சிலே இருந்த பாரம் நீங்கிற்று.

ஆனால் நாம் நினைக்கிறபடியே எல்லாம் நடக்கிறதா? பஸ் புறப்பட்டு ஏழெட்டு நிமிஷந்தான் ஆகியிருக்கும். வழியிலே எதிர்பாராத ஒரு விபத்து ஏற்பட்டது. பக்கத்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/54&oldid=1137293" இலிருந்து மீள்விக்கப்பட்டது