பக்கம்:உரிமைப் பெண்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உரிமைப் பெண்


திலே இருக்கும் ஒரு சிறிய தெருவிலிருந்து வேகமாக வந்த கார் தடாலென்று பஸ்மேல் மோதிவிட்டது. பஸ் டிரைவர் எவ்வளவோ சாமர்த்தியமாக அதைத் தடுக்க முயன்றும் பயனில்லாமல் போயிற்று. அவன் மேல் தவறு இல்லை. காரை ஒட்டிக்கொண்டு வந்த இளைஞனுக்குப் புதுப் பழக்கம். அதனால் அவன் வேகத்தைக் குறைக்க முடியாமல் வந்து இடித்துவிட்டான். அவனுடைய கார் புதியது. அதன் முன்பாகத்தில் இருந்த விளக்கு போயிற்று. ஆனால் நல்ல வேளை அவன் உயிர் தப்பினான். நெற்றியில் மட்டும் பெரிய காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது. பஸ்ஸில் அதிகமாகப் பழுது ஏற்படவில்லை. பிரயாணிகளுக்கும் யாதொரு தீங்கும் இல்லை. பஸ் ஒட்டியவன் திறமைதான் அதற்குக் காரணம் என்று சொல்லலாம்.

எல்லோரும் அவனைப் புகழ்ந்தார்கள். ஆனாலும் அவனுக்குப் பயம். எங்கே தன் வேலை போய்விடுமோ என்று அவன் கலங்கினான். பஸ்ஸில் வந்த பிரயாணிகளையெல்லாம் அங்கேயே இருந்து நடந்த விஷயத்தை அப்படியே அதிகாரிகளுக்கு எடுத்துச் சொல்லித் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டிக்கொண்டான். நடராஜ பிள்ளை மரியாதைக்கு உரியவராகவும் வயதானவராகவும் தோன்றியதால் அவரைக் கட்டாயம் இருந்து சாட்சி கூறும்படி டிரைவர் வெகுவாகப் பரிந்து கேட்டான். அதை மறுக்க அவரால் முடியவில்லை. மேலும் அது பிரயாணிகளின் கடமையும் அல்லவா?

நடுவழியில் வேறொரு பஸ் அந்த நேரத்தில் கிடைப்பதும் சுலபமல்ல. வேலைக்கு அனைவரும் போகும் சமயமானதால் பஸ்கள் நிறைந்து வந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/55&oldid=1137302" இலிருந்து மீள்விக்கப்பட்டது