பக்கம்:உரிமைப் பெண்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது?

53

 முதலியவர்களெல்லாம் வெளியே சென்ற பிறகு அவர் தலைமைக் கணக்கரை அழைத்தார். தலைகுனிந்தபடியே அவர் மெளனமாக வந்து நின்றார். சற்று நேரம் இருவரும் வாய் திறக்கவில்லை. பிறகு மானேஜர், நீங்கள் இப்படிச் செய்வீர்களென்று நான் நினைக்கவே இல்லை. பலமுறை இதுமாதிரி காரியம் நடந்திருக்காது என்றுதான் இப்பொழுதும் எனக்கு நம்பிக்கை. ‘வேலையிலிருந்து விலகிக் கொள்ளும் சமயம். ஆகையால் இதைப் பற்றிப் பேசாமல் அப்படியே விட்டுவிடலாம். இதனால் உங்கள் மேலிருந்த நல்ல அபிப்பிராயம் எனக்கு மாறவில்லை’ என்று கூறினார். அந்தச் சமயத்தில்கூட அவர் மனத்திலே என்ன பேசுவதென்ற தெளிவு உண்டாகவில்லை என்பது அவர் வார்த்தையிலிருந்தே வெளியாகியது. நடராஜ பிள்ளை தமது நிலைமையை விளக்கவோ, இம்மாதிரியான குற்றம் முன்னால் என்றும் செய்ததில்லை என்று கூறிக்கொள்ளவோ விரும்பவில்லை. மெளனமாகச் சிறிது நேரம் நின்றார். அவர் பார்வை நிலத்தை நோக்கியே இருந்தது. பதிலை எதிர்பார்க்கிறவர் போன்று மானேஜர் மேலே நோக்கினார். ஆனால் அவரும் பேசவில்லை. பத்து நிமிஷம் இப்படிச் சென்றிருக்கும். அது ஒரு யுகம் போல் இருந்தது நடராஜ பிள்ளைக்கு. பிறகு அவர் அவ்விடத்தை விட்டு மெதுவாக நகர்ந்தார். எப்படியோ விட்டுக்குப் புறப்பட்டுப் போய்ச் சேர்ந்தார்.

அப்புறம் ஒரு பதினைந்து நாட்கள் அவர் பாங்கிக்குச் சென்றிருப்பாரென்று நினைக்கிறேன். ஆனால் அவர் முன்பு இருந்த தலைமைக் கணக்கரல்ல; இப்பொழுது எல்லாம் மாறிப் போய்விட்டது. வழக்கம்போல அவர் குமாஸ் தாக்களையோ மற்ற ஊழியர்களேயோ நிமிர்ந்து பார்ப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/58&oldid=1137330" இலிருந்து மீள்விக்கப்பட்டது