பக்கம்:உரிமைப் பெண்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

உரிமைப் பெண்

 மில்லை. அவருடைய தலை குனிந்தபடியே இருக்கும். அதிகமாகப் பேசுவதுகூட இல்லை. வேலையை மட்டும் யந்திரம்போலச் செய்துகொண்டிருந்தார். நடந்த விஷயம் மானேஜரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவரும் அதுபற்றி மறுபடியும் பேச்செடுக்கவே இல்லை. நடாாஜ பிள்ளையை நடத்தும் முறையிலும் அவர் யாதொரு வேறுபாடும் காண்பிக்கவில்லை. இருந்தாலும் நடராஜ பிள்ளையின் உள்ளம் உடைந்துவிட்டது. கடமை தவறியவன் ஆனேன் என்ற எண்ணம் அவரைப் பிடிக்கலாயிற்று. அவர் கீழ் வேலை செய்பவர்கள் பழையபடியே பயந்து கொண்டு காரியம் செய்தாலும் அவருக்கு என்னவோ அது தம்மைக் கேலி செய்வதுபோலத் தோன்றியது. அவரால் மனவேதனை சகிக்க முடியவில்லை.

அவ்வளவுதான். படுக்கையில் படுத்துவிட்டார். நோயென்று அவர் எந்தக் காலத்திலும் நான்கு நாள் சேர்ந்தாற்போல் கட்டிலில் கிடந்ததில்லை. இந்த முறை ஒரே அடியாகப் படுத்துவிட்டார். அவருக்கு என்ன நோயென்று வைத்தியர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாற்றி மாற்றி ஏதோ மருந்து கொடுத்தார்கள். அவரும் தம் மனைவியின் சொல்லை மறுக்காமல் அவற்றைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்க நான் பல முறை சென்றேன். அப்படிச் சென்றபோது ஒரு தடவை நான் வற்புறுத்தியதன் மேல்தான் அவர் இதுவரை நான் கூறிய விஷயங்களேயெல்லாம் என்னிடம் ரகசியமாகச் சொன்னார். வேறொருவரிடமும் அவர் வெளியிட விரும்பவில்லை.

முப்பது வருஷங்களாக வேலை செய்தேன். ஒரு சின்னத் தப்புச் செய்ததில்லை. கடைசியிலே ஒய்வெடுக்கப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/59&oldid=1137331" இலிருந்து மீள்விக்கப்பட்டது