பக்கம்:உரிமைப் பெண்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது?

55


போகும் தருணத்தில் கடமை தவறிவிட்டேன்’ என்று பெருமூச்சு விட்டார். அவர் கண்கள் மங்கின. அவர் முகம் பார்க்க விகாரமாக மாறியது.

அந்த நிலையில் நான் அவருக்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்? கடமை தவறியதை நினைந்து ஒரு கண்ணியமான உள்ளம் உருகுகின்றது. அதைச் சாந்தப் படுத்த வெறும் வார்த்தைகளுக்கு வன்மை உண்டா ? நான் ஆரம்பத்தில் கூறியபடி நடராஜ பிள்ளை நற்குணங்களின் வடிவமல்ல; அவரிடம் குறைபாடுகள், தவறுகள் உண்டு. ஆனால் கடமை ஒன்றை மட்டும் அவர் வழுவாது செய்து வந்தார். அதில் தவறினால் இவ்வளவு மனச் சோர்வு ஏற்படுமென்று அவருக்கே அதுவரை தெரியாது. நண்பன் என்ற முறையிலே நான் என்ன என்னவோ வழிகளைக் கையாண்டு அவருக்கு ஆறுதல் உண்டாக்க முயன்றேன்.

மானேஜரிடம் சென்று நடந்த விஷயங்களை யெல்லாம் ஒன்றுவிடாமல் சொன்னேன். ‘இந்தச் சமயத்திலே அவருக்கு நீங்கள்தான் ஆறுதல் கொடுக்க முடியும். வேறொருவராலும் அதைத் தர இயலாது. ஒரு நாள்கூடத் தப்புச் செய்யாதவர் கடைசியில் அப்படிச் செய்துவிட்டு உள்ளுக்குள்ளேயே நைந்து உருகுகிறார். மருமகன்மேல் கொண்ட வாஞ்சையின்முன் கடமை உணர்ச்சி மறைந்ததே என்று கலங்குகிறார்’ என்று கூறி வேண்டினேன்.

மானேஜர் நல்லவர். நான் கூறியதைச் சரியான நோக்கோடு ஏற்றுக்கொண்டார். நடராஜ பிள்ளையின் வீட்டிற்கு ஒருநாள் இரவு வந்து அவரோடு தனியாக வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதனால் நல்ல பலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/60&oldid=1137334" இலிருந்து மீள்விக்கப்பட்டது