பக்கம்:உரிமைப் பெண்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

உரிமைப் பெண்

 ஏற்பட்டிருக்குமென்று நம்பி நான் ஆவலோடு மறுநாள் மாலை நடராஜ பிள்ளையைக் காணச் சென்றேன்.

நான் எதிர்பார்க்கபடி ஒரு நன்மையும் ஏற்படவில்லை. அவர் நிலைமை இன்னும் மோசமாகக் காணப்பட்டது. வெகு நேரம் நான் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். ஆனால் அவர் ஒரே மெளனம் சாதித்தார். வேதனையோடு புரண்டு புரண்டு படுத்தார். அவர் உள்ளத்தில் என்ன என்ன எண்ணங்கள் எழுந்தனவோ, யார் கண்டார்கள்?

‘நீங்கள் ஒன்றும் பணத்தைத் திருடிக் கொள்ள வில்லையே? அந்தப் பணம் மறுநாள் காலைவரையில் பெட்டியில் இருந்திருந்தாலும் அதனால் பாங்குக்கு யாதொரு லாபமும் உண்டாகி இருக்காது’ என்று இப்படிப் பேச்சை மாற்றினேன்.

அவர் வாய் திறந்தார். ‘பாங்குக்கு லாபமா இல்லையா, அதா கேள்வி?’ என்று என்மேல் சீறிவிழுந்தார்.

மெளனம் சாதிப்பதைவிட அப்படிச் சீறினாலும் மனக் கொதிப்புத் தணியும் என்று நான் மேலும் மேலும் பேசினேன். என் பேச்சு அவருக்கு வெறுப்பையே தந்தது. அவர் துயரமும் ஓங்கிற்று.

“விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் வாய்க்கு வந்த படி உளறாதீர்கள். நான் கடமையில் தவறிவிட்டேன். அதை இனி மாற்ற முடியுமா? நான் இத்தனை காலம் வாழ்ந்து என்ன பிரயோசனம்?” என்றார் அவர்.

“மானேஜர் உங்களைப்பற்றி வித்தியாசமாக நினைக்கவில்லையே?”

அவர் என்னைக் கண்டித்திருந்தால் எனக்கு ஒரளவு சந்தோஷமாக இருக்கும். வெளியே அனுப்புகிற சமயத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/61&oldid=1137335" இலிருந்து மீள்விக்கப்பட்டது