பக்கம்:உரிமைப் பெண்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது பெரிது?

57

 தில் எதற்குக் கண்டிக்க வேணும் என்று இருந்துவிட்டார். அதுவே என்னே வாட்டுகிறது.”

“இல்லை இல்லை; அவர் அப்படி நினைப்பதாகத் தெரியவில்லை.”

“மானேஜர் நினைப்பதைப் பற்றியும் எனக்குக் கவலையில்லை. எத்தனையோ தடவை நான் இப்படிப் பணத்தைக் கையாண்டிருப்பேன் என்று அவர் எண்ணினாலும் அதைப்பற்றி அவர்மேல் குற்றம் சொல்ல முடியாது. அவருக்கு என்மேல் இருந்த நம்பிக்கையை நான் போக்கிக்கொண்டேன். பிறகு எனக்கு என்ன வேண்டியிருக்கிறது?”

என்னாள் அவருக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை. அரைமணி நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்தேன். அவர் கட்டிலில் நிலை கொள்ளாது புரண்டு புரண்டு பெருமூச்சு விட்டார். அவர் முகத்தில் படிந்திருந்த துயரம் பெருகிக்கொண்டேயிருந்தது. நான் வெளியே புறப்படுகிற சமயத்திலே அவர் மனைவி மருந்தை எடுத்துக் கொண்டு ஏக்கத்தோடு வந்தாள். அவர் அதை வாங்கி அருந்திவிட்டு, கதவருகே வாடிய முகத்துடன் வந்து நின்ற மகளை ஏறிட்டுப் பார்த்தார். பிறகு கட்டிலின்மேல் சாய்ந்து முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டார். நான் வெளியே வந்தேன்.

நாளுக்கு நாள் அவர் நிலைமை மிகவும் கவலைக்கு இடமாக மாறியது. அதுதினமும் நான் அவரைப் போய்ப் பார்ப்பேன். அவர் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்.

ஒரு நாள் என்னால் அவருடைய முகத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. அதில் ஒரே துயரம். என்னையும் மீறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/62&oldid=1137336" இலிருந்து மீள்விக்கப்பட்டது