பக்கம்:உரிமைப் பெண்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மழையும் இடியும்

ப்பசி மாதத்தில் ஒரு நாள் மாலை. மேற்குக் திசையிலே தலை நிமிர்ந்து படுத்திருக்கும் மலைத் தொடர்களின் இடையே வானம் உறுமிக்கொண்டிருந்தது. அங்குக் தோன்றி மேலெழுகின்ற கருமேகங்கள் பயங்கரமாக ஆகாயப் பரப்பை மூடுகின்றன. எட்டு நாட்களாக விடாது பெய்துகொண்டிருந்த மழையெல்லாம் சேர்ந்து ஒரே கணத்தில் பெய்ய வருவது போலத் தோன்றுகிறது. இன்று சற்றுப் பிரகாசித்த சூரியனும் ஒளிந்துகொண்டான். தனது நெருப்பெல்லாம் வரப் போகும் பெரு மழையில் அவித்துவிடுமே என்று பயந்துகொண்டான் போலிருக்கிறது.

நஞ்சப்பன் குறும்பையாட்டு ரோமத்தால் செய்த முரட்டுக் கம்பளியை இழுத்துப் போர்த்துக்கொண்டு திண்ணையிலே உட்கார்ந்திருந்தான். அவனுடைய பொக்கை வாயிலே எருக்கிலையினால் சுற்றிய புகையிலைச் சுருட்டுப் புகைந்துகொண்டிருந்தது. பக்கத்திலே ஒரு வாக்கணத்தில் தீத் தயாராக இருந்தது. சுருட்டு அடிக்கடி கெட்டுப்போகிறது. கிழவனைக் கண்டால் இந்தத் தீக்கூட லட்சியம் செய்வதில்லை. கிழவனுக்கோ வேகமாகச் சுருட்டை உறிஞ்சித் தீயை அணையாமல் செய்யவும் சக்தியில்லை. இந்த நிலையிலே நாலைந்து தரம் நெருப்புக்கொண்டு வத்து கொடுத்துச் சலித்துப்போன அவனுடைய பேத்தி மாராயி ஒரு வாக்கணம் நிறைய நெருப்புக் கொண்டுவந்து வைத்துவிட்டு உள்ளே அடுப்பு வேலையைக் கவனிக்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/65&oldid=1535125" இலிருந்து மீள்விக்கப்பட்டது