பக்கம்:உரிமைப் பெண்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

உரிமைப் பெண்

 நீங்கள் என் அடிக்கடி விசனப்படுகிறீர்கள்? மழையைக் கண்டால் உங்களுக்கு ஏன் இத்தனை பயம்? சொல்லுங்க தாத்தா” என ஆவலோடு கேட்டுக்கொண்டாள்.

நஞ்சப்பனுக்குக் தன் மனத்திலுள்ள துயரத்தை யாரிடமாவது அந்தச் சமயத்தில் கூறிவிடவேண்டுமென்று தோன்றியது. அவன் தொடங்கினன்:

“மாரு, உனக்கு அம்மா ஒருத்தி இருக்காள்; ஞாபகமிருக்கிறதா? அவள்தான் வேலாத்தா. அவள் சாகிறபோது நீ ரொம்பச் சிறு பெண். உனக்கு மூன்று வருஷந்தானிருக்கும். தாயென்றால் அவளைத்தான் சொல்ல வேணும். உன் மேலே அவளுக்கு அத்தனை பிரியம். உன் தகப்பனும் அவளும் சங்தோசமா உன்னை வளர்த்துக் கொண்டு வந்தார்கள். ரெண்டு பேரும் உயிருக்குயிரா இருப்பார்கள். நான்தான் அவர்கள் வாழ்க்கையிலே மண்ணைப் போட்டுவிட்டேன். எனக்கும் அவர்கள் மேலே பிரியந்தான். பெத்த மகனிடத்திலே பிரியமில்லாமலா இருக்கும்? ஆனால் எனக்கென்னமோ அவர்கள் ரெண்டு பேரும் கூடிக் குலாவிக்கொண்டு இருக்கிறதைப் பார்த்தால் சில சமயத்திலே பிடிக்கிறதில்லை. ராமசாமி தான் உன் அப்பன் பேர். அவன் வேலாத்தாளை வேலை செய்யவே அனுப்பமாட்டான். அவளாக இஷ்டப்பட்டு வேலைக்கு வந்தாலும் வெயில் நேரத்திலெல்லாம் வீட்டுக்கு வந்து விடும்படி சொல்லுவான். இது எனக்குப் பிடிக்கவே இல்லை. சிறு வயசுக்காரர்களெல்லாம் நல்லாக் கஷ்டப்பட்டுப் பண்ணையில் வேலை செய்ய வேணும். நமக்கிருப்பதோ கொஞ்சம் நிலம். எல்லோரும் நன்றாகப் பாடுபட்டால்தான் ஜீவனம் பண்ண முடியும். நான் ஓயாமல் வேலை செய்வேன். அப்படி அவர்கள் ரெண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/69&oldid=1137970" இலிருந்து மீள்விக்கப்பட்டது