பக்கம்:உரிமைப் பெண்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் இடியும்

67


“மழை வந்தா என்ன ? நனஞ்சா முளைச்சுப் போவீர்களா ? வீட்டிலே ராணி மாதிரி உட்கார்ந்து கொண்டிருக்க எங்கே போவது? அவள் என்ன மழைத் துளி மேலே பட்டறியாத சீமாட்டியா ? என்று இப்படி யெல்லாம் இடித்து இடித்துப் பேசினேன். பேசின பிறகு ஏன் அப்படிப் பேசினேன் என்று கூட நினைத்தேன். என்னுடைய பேச்சு அவள் மனதைத் தாக்கிவிட்டது. அதற்குள்ளே பெரு மழையும் வந்து தொலைந்தது. அவள் அதைக் கவனியாமல் கும்மிருட்டுக்குள்ளே புறப்பட்டு விட்டாள். நான் போய் ஒட்டி வருகிறேன்; நீ போக வேண்டாம் என்று ராமசாமி கூவினான். அவள் அதைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. போய் நனைந்து சிரமப்படட்டும் என்றுதான் எனக்கும் இருந்தது. அவள் போன சிறிது நேரத்திற்குள் உன்னப்பன் சாந்தலை ஏற்றிக் கொண்டு பின்னாலேயே போனான். ஆகா, பெண்டாட்டி இருட்டிலே போறாள்னு கவலையைப் பாரு” என்று நான் ஏளனமாகக் கூறினேன்.

அவர்கள் திரும்பிவர வெகு நேரமாகிவிட்டது. காற்று வேகமாக அடித்ததால் கொஞ்ச துாரம் போனதும் சாந்தல் அணைந்திருக்க வேண்டும். இடியும் மின்னலும் அன்று பூமியையே பிளக்தெறிவது போலப் பயங்கரமாக இருந்தன. மழை ஒரே வெள்ளமாகக் கொட்டியது. எத்தனையோ மரங்கள் சடசடவென்று முறிந்து விழுந்தன.

“எனக்குப் பயமாகப் போய்விட்டது. அவர்கள் திரும்பி வந்த போது மழையில் நனைந்து நடுங்கிக் கொண்டிருந்தார்கள். வேலாத்தாளுக்குத் தலையிலே ரொம்ப மயிர்; நீளமாகக் தொங்கிக்கொண்டிருக்கும். அவள் தலையை உலர்த்திக்கொண்டாளோ என்னமோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/72&oldid=1138027" இலிருந்து மீள்விக்கப்பட்டது