பக்கம்:உரிமைப் பெண்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மழையும் இடியும்

69


பார்த்தேன். அவன் வெகு நேரம் வரையிலும் திரும்பவே யில்லை. அப்புறம் அவன் வந்து திண்ணை மேலே தொப்பென்று விழுந்தான். மெய்மறந்து கண்டபடி உளறிக் கொண்டிருந்தான். ‘வேலாத்தா, அதோ கடாரியைப் பிடி, மழை வந்தால் முளைச்சா போவாய்? இந்தா, அதோ ஒடு’ என்றெல்லாம் பேசினான். அவன் உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது. ‘இந்த மழையில் எதற்கடா வெளியே போனாய்?’ என்று நான் கதறினேன். கதறி என்ன செய்வது? மகன் எழுந்திருந்து என்னிடம் ஒரு நல்ல வார்த்தைகூடப் பேசவில்லை. அப்படியே மாண்டு போனான்.” இதைச் சொல்லிவிட்டுக் கிழவன் வாய்விட்டு அழுதான். மாராயியும் கூடச் சேர்ந்துகொண்டாள்.

“மழைதானம்மா அவர்கள் ரெண்டு பேருக்கும் கூத்துவனாக வந்தது” என்று விம்மியவாறே கிழவன் சிறுமியை அணைத்துக்கொண்டான்.

அந்தச் சமயத்தில் மழை சட்டென்று நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/74&oldid=1138054" இலிருந்து மீள்விக்கப்பட்டது