பக்கம்:உரிமைப் பெண்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டணம் கை

71


முன்பே கூறியிருந்தார்கள். வீடு கிடைப்பது அவ்வளவு எளிய காரியமா? பட்டணமென்று சொன்னால் மாத்திரம் அது எப்படிச் சுலபமாகக் கிடைக்க முடியும் என்று நான் பெரிய தத்துவ சாஸ்திரி போல நினைத்துக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். குடியிருப்பதற்கு வீடு தேடி அலைந்தபோதுதான் அவர்கள் கூறிய செங்கல்லும் சுண்ணாம்பும் மணலும் கலந்து உண்டாக்கிய இந்த வீட்டின் அருமை தெரிய வந்தது.

கடைசியில் எப்படியோ ஒரு வீட்டை எற்பாடு செய்துகொண்டு குடும்பம் ஆரம்பித்தேன். ஆரம்பித்துச் சரியாக ஒரு மாதங்கூட ஆகவில்லை; அதற்குள் அந்தச் சம்பவம் நிகழ்ந்துவிட்டது.

ஒரு நாள் மாலை சுமார் மூன்று மணி இருக்கும். ஒருவன், “இது வக்கீல் வீடா?” என்று தெலுங்கிலே கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். முன் அறையில் மேஜையருகில் நான் அமர்த்திருந்தேன். “இல்லை, இங்கே யாரும் வக்கீல் அல்ல” என்று நான் தமிழில் பதில் சொன்னேன்.

“பக்கத்து வீட்டிலே விசாரித்தேன்; புதிதாக ஒரு வக்கீல் குடி வந்திருப்பதாகச் சொன்னர்களே? அப்பீல் ஒன்று ஹைக்கோர்ட்டில் தாக்கல் செய்யவேண்டும்” என்று தொடர்ந்து தெலுங்கிலேயே விசாரித்தான்.

“நான் வக்கீல் அல்ல; இந்தப் பட்டணத்திலே பக்கத்து வீட்டுக்காரருக்கு என்ன உத்தியோகமென்றுகூடத் தெரிகிறதில்லை” என்று கூறி நான் அவனை வெளியிலே அனுப்பினேன். அவனும் ஏமாந்தவன்போல் போனான். ‘பாவம் யாரோ ஆந்திர நாட்டுக் கிராமவாசி போலிருக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/76&oldid=1138071" இலிருந்து மீள்விக்கப்பட்டது