பக்கம்:உரிமைப் பெண்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

உரிமைப் பெண்

 பியவன் அது வரையில் எங்கெங்கோ சுற்றிவிட்டுவந்தான். வந்தவன் மகிழ்ச்சியோடு, "கைக் கடிகாரம் ஒன்று வாங்க வேண்டுமென்ற சொன்னேனல்லவா? நல்லதாக ஒன்றைக் குறைந்த விலையில் வாங்கிவிட்டேன்” என்று என்னிடம் சொன்னான். “அப்படியா? எங்கே, பார்க்கலாம்” என்றேன் நான்.

கடிகாரத்தை உடனே என்னிடம் காட்ட நண்பன் விரும்பவில்லை. அதை அவன் வாங்கிய பிரதாபத்தை யெல்லாம் ஆதியோடந்தமாக எனக்கு எடுத்துரைத்து விட்டுப் பிறகு காண்பிக்கவேண்டுமென்பது அவனுடைய ஆசை. அதனால், “முதலில் அதை வாங்கிய விதத்தைப் பற்றிச் சொல்கிறேன். பிறகு கடிகாரத்தைப் பார்க்கலாம்” என்றான் அவன்.

“எப்படி வாங்கியிருப்பாய்? எல்லோரையும் போலத் தான் கடையெல்லாம் புகுந்து புகுந்து, ஆயிரத்தெட்டுக் கடிகாரங்களைப் பார்த்துவிட்டுக் கடைசியில் ஒர் ஒட்டைக் கடிகாரத்தை வாங்கி வந்திருப்பாய்” என்று கேலி செய்தேன் நான். “உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நான் அப்புடியொன்றும் செய்யவில்லை” என்று அவன் பெருமையோடு பேசினன்.

“சரி; வாங்கின விதத்தைத்தான் சொல்லேன்” என்று நான் கேட்டேன்.

என் நண்பன் ஆரம்பித்தான்: “நான் சுமார் ஐந்தரை மணிக்குச் சைனா பஜாரில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அடாடா என்ன கூட்டம்! கார்களும், பஸ்களும், டிராம்களும் எத்தனை! எனக்கு அப்படியே பிரமிப்பாய்ப் போய்விட்டது. ஒர் இடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/79&oldid=1138088" இலிருந்து மீள்விக்கப்பட்டது