பக்கம்:உரிமைப் பெண்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

உரிமைப் பெண்

 ‘ஸார்’, அவன் எந்தப் பக்கம் போனனென்று பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

“யாரைப்பற்றிக் கேட்கிறாய்?” என்றேன் நான்.

“அவன் என்னுடைய சிநேகிதன்தான். அவனுக்கு இப்போ பணத்திற்கு ரொம்ப அவசரம். அதனாலே தன் கைக் கடிகாரத்தை விற்கவேண்டுமென்று நினைக்கிறான். ஒரு மாதத்திற்கு முன்புதான் 110 ரூபாய் கொடுத்து அதை வாங்கினான், எனக்கு நன்றாகத் தெரியும். இன்றைக்கு எட்டு மணிக்குள் அவனுக்குப் பணம் அவசரமாக வேண்டியிருக்காவிட்டால் அவன் அதை விற்கவே மாட்டான். நான் ஐம்பது ரூபாய்க்குக் கேட்டேன்; அவன் 75 கேட்கிறான். ஐம்பதுக்கு மேல் இன்னும் ஒர் ஐந்து ரூபாய் வைத்தால் பேசாமல் கொடுத்துவிடுவான். அவனை விட்டுவிடக்கூடாது. வேறு யாராவது அந்தக் கடிகாரத்தைத் தட்டிக் கொண்டு போய் விடுவார்கள். அவன் எங்கே போனானென்று தெரியுமா?” என்று அவசரம் அவசரமாகக் கேட்டான்.

“நான் கவனிக்கவில்லையே” என்று பதில் கொடுத்தேன். உண்மையில் அவன் எந்தப் பக்கம் போனானென்று நான் பார்க்கவில்லை. அந்த மனிதன், ‘அடாடா! ஏமாந்து போய்விடும் போலிருக்கிறதே’ என்று கூறிக்கொண்டே ஒரு திக்கில் நடந்தான்.

“நாலு பக்கமும் பார்த்துக்கொண்டே நான் மெதுவாக நகர்ந்தேன். ஒருவன் கண்ணாடி தம்ளர் விற்கிறான்; ஒரு கிழவி, ‘லட்டெல்லாம் ரண்டணா, லட்டெல்லாம் ரண்டணா’ என்ற சாத்துக்குடிப் பழம் விற்கிறாள். பலூன் வியாபாரி ஒரு பக்கம் கீச்சுக் கீச்சென்று சத்தம் செய்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/81&oldid=1138131" இலிருந்து மீள்விக்கப்பட்டது