பக்கம்:உரிமைப் பெண்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டணம் கை

77


கிறான். கண்ணில்லாத கபோதி ஒருவன் ஊதுவத்தி விற்கிறான், பல்லுக்குச்சி ஒரு புறம், பனியன் ஒரு புறம்; இன் னும் ரிப்பன் என்ன, காலண்டர் என்ன, பொத்தான் என்ன, பாச்சைக் குண்டு என்ன,—இப்படிப் பல வகையான சாமான்கள் ஜனங்கள் நடக்கும் குறுகிய பாதையிலேயே விற்கப்படுகின்றன. நகருவதற்குக் கூட இடமில்லை. ஒரே கூட்டம், ஒரே கூச்சல். கிராமத்தில் அமைதியாக இருந்துவிட்டு வந்த எனக்கு இந்த ஆரவாரத்தைக் கேட்டுத் தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது. கார் சத்தம் வேறு, எதற்கு அப்படிச் சத்தம் போடும் ஹாரன்களை வைத்துக்கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. பட்டணத்து ஜனங்களுக்குக் காது செவிடோ, என்னவோ. டிராம் சத்தம் வேறு. எனக்கு ஒரே மலைப்பாகப் போய் விட்டது. அதோடு அந்தப் பெட்ரோல் புகை நாற்றம் இருக்கிறதே, அதைத்தான் என்னால் சகிக்கவே முடியவில்லை. தலைவலி எடுத்துக்கொண்டது. இருந்தாலும் பட்டணத்துக் காட்சி ரொம்ப ஜோர்தான். நான் இவற்றை யெல்லாம் பார்த்துக்கொண்டு பத்துப் பதினைந்து கஜ துாரம் போயிருப்பேன்.

“அதற்குள் அந்தக் கடிகாரக்காரன் திரும்பி வந்து சேர்ந்தான். ‘ஸார்’, என்னிடம் பேசிக்கொண்டிருந்தானே, அவன் எங்கே போனானென்று பார்த்தீர்களா?” என்று கேட்டான்.

“எனக்கு எப்படித் தெரியும்? உன்னைத்தான் தேடிக் கொண்டு போனான் அவன்” என்றேன்.

“நீங்கள்தான் பாருங்கள் ஸார்; இந்தக் கடிகாரத்தை அவன் 50 ரூபாய்க்குத் தட்டிக்கொண்டு போகலாமென்று பார்க்கிறான். வாங்கி ஒரு மாதங்கூட ஆகவில்லை. 110

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/82&oldid=1138137" இலிருந்து மீள்விக்கப்பட்டது