பக்கம்:உரிமைப் பெண்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டணம் கை

79

 “அடைமானம் வாங்கிக்கொள்ள நான் இந்த ஊரல்ல. சுத்தக் கிரயமாக 60 ரூபாய் கொடுக்கிறேன். அதற்கு மேலே அது பொறாது” என்று சாமர்த்தியமாகப் பேசினேன்.

“கொஞ்ச கோம் அவன் என்னுடன் வாதாடினான்; இடையிடையே தன்னுடைய தலைவிதியை நொந்துகொண்டான். நான் பிகுவாகவே இருந்தேன். சரி; உனக்கு இஷ்டமில்லாவிட்டால் வேண்டாம்; வேறு யாருக்காவது விற்றுக்கொள்” என்று கூறிவிட்டு நடந்து காட்டினேன். நான் அடியெடுத்து வைப்பது கண்டு அவன் மடங்கிவிட்டான். என்னை விட்டுவிட்டால் அவனுக்கு ஐம்பது ரூபாய்க்கு மேல் கொடுக்க ஆள் கிடையாதல்லவா? அதனால் அவன் பேசாமல் கடிகாரத்தை எனக்கு விற்றுவிட்டான்.

“எப்படி என்னுடைய வேலை?” என்று கூறிக் கொண்டே என் நண்பன் தான் வாங்கிய கைக் கடிகாரத்தை என்னிடம் காட்டினான். அவன் அதைச் சல்லிசாகத்தான் தட்டிக்கொண்டு வந்திருக்கிறான் என்பது எனக்கு உடனே விளங்கி விட்டது; கடிகாரமும் புதிது தான்; அதன் விலையும் 110 ரூபாய்தான். இவையெல்லாம் எனக்கு நிச்சயமாகத் தெரியும். ஏனென்றால் அது என்னுடைய கைக் கடிகாரந்தான்.

பட்டணத்துக் கையின் வேலை வெகு சுறுசுறுப்பாக நடந்துவிட்டது. எடுப்பதிலேயும் அப்படி, அதைப் பணமாக்குவதிலேயும் அப்படியே.

மூன்று மணிக்கு நடந்த திருட்டைப் பற்றி என் நண்பனுக்குக் கூற வாயெடுத்தேன். ஆனால் சட்டென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/84&oldid=1138155" இலிருந்து மீள்விக்கப்பட்டது