பக்கம்:உரிமைப் பெண்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

உரிமைப் பெண்

 களின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பாள். குழந்தைத் துடிப்பு அவள் நடையிலும் பேச்சிலும் தென்படும். கொடுத்ததை அநாயாசமாக வாங்கிக்கொண்டு தான் அழைத்து வந்த குருட்டுப் பையனிடம் போவாள். அந்தப் பையன் அவள் திரும்பும் வரை ஒரிடத்தில் நின்று பாடிக் கொண்டிருப்பான்.

இப்படி அந்தச் சிறுமியை ஒரு நாள் போலப் பல நாள் ரெயிலில் கண்டிருக்கிறேன். நான் இருப்பது காரமடையில்; எனக்கு உத்தியோகமோ கோயமுத்துாரில். அதனால் விடுமுறை நாட்கள் தவிர மற்ற நாட்களில் காலை ரெயிலில் கோவை செல்வதும், மாலை ரெயிலில் காரமடை திரும்புவதும் எனது வாழ்க்கை விதியாகப் போய்விட்டது. எனவே அப் பிச்சைக்காரச் சிறுமியை நான் அடிக்கடி பார்க்க முடிந்தது.

சில நாட்களுக்குள்ளாகவே எனக்கு அவளிடம் என்னை அறியாமல் ஒரு வாஞ்சை பிறக்கலாயிற்று. நான் அவளைக் காணும்போதெல்லாம் புன்முறுவல் செய்வேன்; காசும் கொடுப்பேனென்று சொல்லத் தேவையில்லை.அதனால் நாளடைவில் அவள் என்னிடம் தாராளமாகப் பேசிப் பழகலானாள்.

கூட வருகின்ற அந்தக் குருட்டுப் பையன் யாரென்று ஒரு நாள் இவளைக் கேட்டேன்.

“அவன் எனக்கு அண்ணன்-மாரியாத்தா வந்து அவனுக்கு ரண்டு கண்ணும் போய்ட்டுது” என்றாள்.

“உங்களுக்குச் சோறு போட ஒருத்தரும் இல்லையா? ஏன் பிச்சை எடுக்கிறீர்கள் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/87&oldid=1138183" இலிருந்து மீள்விக்கப்பட்டது