பக்கம்:உரிமைப் பெண்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

உரிமைப் பெண்


அப்படியிருக்க இன்று அவன் திடீரென்று இவ்விதம் செய்ததுதான் யாருக்கும் விளங்கவில்லை. காட்டுப்பாளையத்து மக்கள் அனைவருக்கும் இது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கிவிட்டது. நேரிற் கண்டவர்கள் அப்படியே ஸ்தம்பித்துப் போனர்கள். காதில் கேட்டவர்கள், “ஆ அப்படியா? இத்தனை நாள் இல்லாமே இன்னைக்கு ஏன் அப்படி அவனுக்குக் கோபம் பொங்கிவிட்டது?” என்று அதிசயித்தார்கள்; பெண்கள் கன்னத்தில் கையை வைத்து மருண்டு விழித்தார்கள். சில கிழவிகள், “மசைக் கோபம் என்பது இதுதான். மசையனுக்குக் கோபம் வந்தால் அதை யாராலும் தணிக்க முடியாது” என்றார்கள்.

இவ்வாறு எல்லோரும் மலைத்துப் போகும்படியாக இன்று சொங்கப்பனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவனுடைய கோபத்திற்குள்ளான பொன்னப்பன் பல வருஷங்களாக அந்த ஊரிலேயே இருக்கவில்லை. இன்று காலையில்தான் ஊருக்கு வந்து சேர்ந்தான். அப்படியிருக்க அவன் மேல் சொங்கப்பனுக்கு அத்தனே பெரிய கோபம் உண்டானது மேலும் மலைப்பை அதிகரிக்கச் செய்தது.

இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் காட்டுப் பாளையத்திலிருந்து கண்டிக்கு நாலைந்து பேர் ஒரே இரவில் யாரும் அறியாமல் புறப்பட்டுப் போய்விட்டார்கள். உள்ளூரில் கூலி கிடைப்பது அரிதாயிருந்தது. ஏதோ கிடைப்பதும் வயிற்றைக் கழுவுவதற்கே போதாமலிருந்தது. அதனால் பணம் சம்பாதிக்கவேண்டும், கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று ஆசைப் பட்டவர்களுக்கு அந்த ஊர் லாயக்கில்லாமல் போய்விட்டது. கண்டிக்குப் போனால் ஐந்தாறு வருஷங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைப்_பெண்.pdf/9&oldid=1136602" இலிருந்து மீள்விக்கப்பட்டது